Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6121
இந்தியன் 2 ஆஸ்கர் விருது உறுதி… சொல்லி அடிச்ச இந்தியன் தாத்தா… - Dinaseval News

இந்தியன் 2 ஆஸ்கர் விருது உறுதி… சொல்லி அடிச்ச இந்தியன் தாத்தா…

0
Follow on Google News

பிரம்மாண்ட இயக்குனர் என்பதற்கு பெயர் போன சங்கர், பிரம்மாண்டமாக இயக்கிய கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்திற்கு ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதோடு இந்த படம் எப்போது வெளியாகும் என்றும் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருந்தனர். மேலும் இந்த படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஜூலை 12-ம் தேதி வெளியானது.

இந்தியன் முதல் பாகத்தில், லஞ்சம் வாங்கி மக்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், இந்தியன் தாத்தா அழிப்பதை மையக்கருவாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் தான் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் தற்போதைய தலைமுறையில் லஞ்சத்தால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து இயக்குனர் சங்கர் பிரமாண்டமாக எடுத்துள்ளார்.

இந்நிலையில்தான் இந்த படம் வெளியாகிய முதல் நாளிலேயே, இவ்வளவு கோடி வசூல் செய்துள்ளதா என வாயை பிளக்கும் அளவிற்கு, இந்தியன் 2 செய்த வசூல் எவ்வளவு கோடி என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்தியன் படம் ரிலீசாகி 28 ஆண்டுகள் கழித்து வெளியான இந்தியன் 2 படத்தை 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்குனர் சங்கர் உருவாக்கி இருக்கிறார்.

இந்நிலையில்தான் இப்படத்திற்கான பாக்ஸ் ஆபீஸ் வசூலும் ஆயிரம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல்தான் இப்படம் வெளியாவதற்கு முன்பே, உலக அளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே 16 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதை போல் தமிழகத்திலும் 5.5 கோடி ரூபாய்க்கும், ஹிந்தியில் 70 லட்சத்திற்கும் வசூல் வேட்டையை அடித்திருந்தது.

இதனை தொடர்ந்துதான் வெளியான இந்தியன் 2 படத்தில் முதல் நாள் வசூலே பிச்சு உதறி இருக்கிறது. 106 வயதாகும் இந்தியன் தாத்தாவை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாகவும் படையெடுக்கின்றனர். அதன் எதிரொலியாக தான் இந்த படம் வெளியாகிய முதல் நாள் வசூல் மட்டும் உலகளவில் 60 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக 17 கோடி வரை வசூல் செய்துள்ளது,

தெலுங்கில் 7 கோடி ரூபாயும், இந்தியில் 2 கோடி ரூபாய் என மொத்தம், இந்திய அளவில் மட்டும் முதல் நாளில் 26 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. இருப்பினும், இவ்வளவு பெரிய வசூல் சாதனையை இந்தியன்-2 பெற்றாலும், இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்த வண்ணம் உள்ளது. மேலும் கமல்ஹாசன் சிறப்பு தோற்றமாக நடித்து வெளியாகியிருந்த கல்கி படம் கூட, முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 180 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

ஆனால் இந்தியன் 2 படம் முதல் நாளில் உலக அளவில் 60 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. மேலும் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியாகி இருந்த விக்ரம் படத்திலும், முதல் நாளிலேயே இந்திய அளவில் 32 கோடி வசூல் ஈட்டியது. அந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமே 29 கோடி ரூபாய் வசூலையும், தெலுங்கில் 2.8 கோடி ரூபாய் வசூலையும், ஹிந்தியில் 28 லட்சம் ரூபாய் வசூலையும் ஈட்டியது. ஆனால் விக்ரம் படத்தின் வசூல் பக்கத்தில் கூட வர முடியாத அளவுக்கு இந்தியன் 2 படத்தின் முதல் நாள் வசூல் அமைந்துள்ளது.

இருப்பினும், கமல்ஹாசன் ரசிகர்கள் முதல் நாள் என்ன முதல் நாள்..? படத்தின் ஒட்டுமொத்த வசூலை பாருங்கள், 1500 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். மேலும் காமெடி நடிகரான ரோபோ சங்கர் அவர்களும் கூட, படம் கட்டாயம் மிகப்பெரிய வெற்றியை பெரும், இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியன் 2 படத்தில் உலக நாயகன் நடிப்பிற்காக அவருக்கு மீண்டும் ஒரு தேசிய விருதும், ஆஸ்கர் விருதும் கதவை தட்டும் என்றும், படத்தின் வசூல் குறித்து எவ்விதமான சந்தேகமும் வேண்டாம், படம் கட்டாயம் 1500 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்றும் கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!