வனிதா இயக்கி நடித்த மிஸஸ் அன்ட் மிஸ்டர் படத்தில் இளையராஜா இசையில் வெளியான பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா அந்த படத்தின் மீது காப்பி ரைட்ஸ் நோட்டிஸ் அனுப்பி இருந்தார், இதனை தொடர்ந்து. இந்த விவகாரம் மிக பெரிய சர்ச்சையாக வெடித்தது.
பேட்டி ஒன்றில் வனிதா விஜயகுமார் நான் இளையராஜா வீட்டிற்கு மருமகளாக செல்ல வேண்டிய வழி என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் வனிதா விஜயகுமார் தன்னுடைய படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தி இருக்கிறார். அதற்கு அவர் வழக்கு தொடர்ந்த நிலையில் நான் இளையராஜாவை சந்தித்து அதற்கான அனுமதி பெற்று விட்டேன் என வனிதா தெரிவித்து இருந்தார்.

ஆனால் அப்படி அனுமதி பெற்று விட்டார் என்றால் அதற்கான கடிதம் இருக்கிறதா? சோனிக் மியூசிக் இடம் வாங்கியதற்கான ஆதாரம் இருக்கிறதா? இப்படி எதையுமே வனிதா விஜயகுமார் காட்டவில்லை. அது மட்டுமல்லாமல் சோனி ம்யூசிக்கிற்கும் இளையராஜாவுக்குமே பிரச்சனை இருக்கும் போது சோனி மியூசிக்கிடம் இருந்து எப்படி வனிதா அனுமதி பெற்றார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து பேசுகையில், வனிதாவின் பெரிய பொய் என்னவென்றால் இளையராஜா வீட்டில் தான், நான் வளர்த்தேன், நான் அவர் வீட்டு பொண்ணு என்று சொல்லி இருக்கிறார். மஞ்சுளாவும், விஜயகுமாரும் அடுத்தடுத்த படங்களில் நடித்து நிறைய சம்பாதித்து வைத்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது சோற்றிற்காக இளையராஜா வீட்டில் விடுவார்களா?
அப்படி வனிதா விஜயகுமாரை வளர்க்கக்கூடிய பரந்த மனப்பான்மை கொண்டவரா இளையராஜா? தம்பி மகன்கள் மீதுதே பெரிய அளவு அன்பு காட்டாதவர் இளையராஜா. அப்படி இருக்கும் போது வனிதாவை மருமகளே என்று சொல்வாரா… பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா… இளையராஜா தன் மீது வழக்கு தொடர்ந்து இருப்பதால், அந்த ஆத்திரத்தில் இளையராஜா மீது பழிபோடுகிறார் என குற்றசாட்டுகளை அடுக்குகிறார் சினிமா பத்திரிகையாளர்.
மேலும் கங்கை அமரனே வனிதா சொல்வது பொய் அது உண்மை இல்லை என்று சொல்லிவிட்டார் . இந்நிலையில் இளையராஜா இசையமைத்த ராத்திரி சிவராத்திரி தூக்கம் போச்சு என்ற பாடலை வனிதா விஜயகுமார் பயன்படுத்தியது. தன்னிடம் அனுமதி பெறாமல் இந்த பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நடிகை வனிதா விஜயகுமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த பாடலை பயன்படுத்த பாடல் மீது உரிமை பெற்றுள்ள சோனி நிறுவனத்திடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளோம் என்றும் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், திரைப்படம் வெளியாகி விட்டது. இந்த நிலையில் தடை எதுவும் விதிக்க முடியாது. வேண்டுமென்றால் மனுதாரர் இழப்பீடு பெறலாம். இதுகுறித்து வனிதா தரப்பு பதில் அனுப்ப, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 21ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பொதுவாகவே காப்பி ரைட்ஸ் பிரச்சனையில் இளையராஜாவிடம் பலரும் சிக்கி வந்த நிலையில், தற்பொழுது வனிதா விடம் சிக்கி ஐய்யோ… தேவையில்லாமல் கேஸ் போட்டு விட்டேன் என இளையராஜா படாத படு பட போகிறார் என்கிறது சினிமா வட்டாரங்கள்.