நடிகை வனிதா விஜயகுமார் அவருடைய மகள் தயாரிப்பில் ‘மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் கதையை வனிதாவே எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ‘ராத்திரி சிவராத்திரி’ பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே அந்தப் பாடலுக்கான உரிமையை வாங்கிவிட்டதாக வனிதா கூறியிருந்தார்.
வனிதா, இளையராஜாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கி, அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். இருப்பினும், இளையராஜா அவர் மீது வழக்கு தொடர்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதில், இளையராஜா வீட்டுக்கு தான் மருமகளாக போயிருக்க வேண்டும் என்று வனிதா பேசியது சர்ச்சையை கிளப்பியது.

இருந்தும் இந்த படத்திற்கு அது ஒரு பப்ளிசிட்டி போன்று அமைத்தது. இதனால் இந்த படத்திற்கு ரசிகர்கள் படையெடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை. ஒரு வாரத்திற்குள் இந்த திரைப்படம் தியேட்டரில் இருந்து வெளியேறுகிறது. இதனால் வனிதா இப்போது புதிய முடிவெடுத்திருக்கிறார்.
அதாவது இந்த படத்தை ஓடிடி அனுப்பாமல் தன்னுடைய youtube சேனலில் வெளியிடுவதாக முடிவெடுத்து இருக்கிறார். அதிலும் மெம்பராக இணையும் நபர்கள் மட்டுமே அந்த படத்தை பார்க்கும்படி வைத்து இருக்கிறாராம். இந்த மெம்பர்ஷிப் பெறுவதற்கு எண்பத்தி ஆறு (₹ 86) ரூபாய் கட்டண சேவை செலுத்த வேண்டுமாம். ஒரு முறை செலுத்தி விட்டால் வனிதாவின் படங்கள் எல்லாவற்றையும் அதிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று வனிதா கூறி இருக்கிறார்.
இது குறித்து வனிதா வெளியிட்ட லைவ் வீடியோவில் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். நான் இந்த படத்தை உருவாக்குவதற்காக அதிகமான கடன் வாங்கி இருக்கிறேன், என்னை நம்பி பல குடும்பங்கள் இருக்கிறது நீங்கள் எனக்காக பல நேரங்களில் உதவி செய்திருக்கிறீர்கள் துணையாக இருந்திருக்கிறீர்கள். நீங்கள் இப்போது இந்த சின்ன தொகையை கட்டி மெம்பராக மாறிவிட்டீர்கள் என்றால் எனக்கு பெரிய உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார் வனிதா.
மேலும் தனது சொந்த குடும்பத்தினரே பல துரோகங்கள் செய்திருப்பதாகவும், அக்காலத்தில் சமூக ஊடகங்களின் சக்தி பற்றி தெரியாததால், தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் சொல்ல முடியவில்லை என்றும் கண் கலங்கி வனிதா விஜயகுமார் பேசிய பேச்சு மனதை உருக வைப்பது போன்று அமைத்துள்ளது. மேலும் வனிதா விஜயகுமார் ஒரு பெண்ணாக சவால் மிக்க இந்த சமூகத்தில் தொடர்ந்து போராடி வந்தாலும், அவருக்கு காலம் கைகொடுக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
முதல் திருமணம் தோல்வி, இரண்டாவது திருமணம் தோல்வி, மூன்றாவது திருமணமும் தோல்வி, மூன்றாவது திருமணத்திற்கு முன்பு ராபர்ட் மாஸ்டர் உடன் காதல் தோல்வி, இப்படி தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் தொடர் தோல்வியை சந்தித்து வந்த வனிதா விஜயகுமார் குறித்து ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், சாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் சொந்தமாக தயாரித்து, அவரே இயக்கி நடித்த படமும் தோல்வியை தழுவி இருக்கிறது.
இப்படி சோகங்கள் நிறைந்த வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் இனி வரும் கலங்களில் மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் நேரம் காலம் அவருக்கு இனிமையாக அமையட்டும் என்று , வனிதா விஜயகுமாரின் லட்சக்கணக்கான ரசிகர்கள் பிராத்தனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.