தனக்கு தானே ஆப்பு வைத்த விஜய் சேதுபதி…சினிமாவில் அழிவின் விளிம்பில் விஜய்சேதுபதி.. என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு கதாபாத்திரங்களில் பத்து வருடங்களுக்கு மேலாக நடித்து கொண்டே சினிமாவில் போராடி கொண்டிருந்த காலகட்டத்தில், இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானர். ஹீரோவாக நடித்த முதல் படமே மிகப்பெரிய ஹிட் கொடுத்து பல விருதுகளை அள்ளி குவித்தார் விஜய் சேதுபதி.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியதை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் பிசி நடிகரானார், விஜய் சேதுபதி. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், காற்று உள்ள போதே தூற்றி கொள் என்கிற பழமொழிக்கு ஏற்ப, காசு கிடைத்தால் போதும், என கிடைக்கும் அணைத்து கதாபாத்திரத்தில் நடித்து, வருடத்திற்கு சுமார் ஏழு படங்களுக்கு மேல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியானது.

ஹீரோவாக நடித்து வாங்கும் சம்பளத்தை விட, வில்லனாக நடிக்க அதிகம் சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக, தன்னுடைய இமேஜ் பற்றி கவலை படாமல், சற்றும் தயங்காமல் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தொடங்கினார் விஜய் சேதுபதி. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி அடுத்தடுத்து தெலுங்கு ஹிந்தி படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகப்படுத்திய அவரது குருநாதர் சீனு ராமசாமி பலமுறை விஜய் சேதுபதி ஆசைக்கு ஒரு படத்தில் வில்லனாக நடிக்கலாம், ஆனால் தொடர்ந்து இது போன்று செய்து வருவது அவரது சினிமா எதிர்காலத்திற்கும், அவர் செய்யும் தொழிலுக்கு அழகு இல்லை என பலமுறை எச்சரித்தும், அதை பொருட்படுத்தாமல், அதிகம் சம்பளம் கிடைத்தால் போதும் என வில்லனாக நடித்து வந்தார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் 3 ஹிந்தி படங்கள், 1 தெலுங்கு படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தமிழில் விடுதலை படத்தில் மட்டும் நடித்து வருகிறார். தமிழில் அடுத்தடுத்து படவாய்ப்புகள் விஜய் சேதுபதிக்கு குறைய தொடங்கியுள்ளது. மேலும் அவர் வில்லனாக நடித்த மாஸ்டர், விக்ரம் போன்ற படங்கள் கூட அந்த படத்தில் நடித்த ஹீரோ ப்ரோமோஷன் காரணமாக தான் வெற்றி பெற்றது, அந்த படங்களில் விஜய் சேதுபதி தவிர்த்து எந்த ஒரு ஹீரோ நடித்திருந்தாலும் படம் இதே வெற்றியை பெற்று இருக்கும் என்கிற தோற்றம் சினிமா வட்டாரத்தில் உண்டு.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் ஓன்று பாதி படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் சுப்புராஜ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் சன் பிக்சர்ஸ்க்கு எடுத்து கொடுக்கிறார். இந்த படத்திற்கான சாட்டிலைட் விற்பனை, ஓ டி டி விற்பனை என அனைத்தும் படுமோசமான வரவேற்பை பெற்றுள்ளதால். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜிடம் ஒப்படைத்துவிட்டு, நீங்களே எடுத்து வெளியிட்டு கொள்ளுங்கள் என்று சன் பிக்சர்ஸ் வெளியேறியுள்ளது.

மேலும் விஜய் சேதுபதி மார்க்கெட் படு மோசமாக இருப்பதால், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் விஜய் சேதுபதி வைத்து படம் எடுக்க தயங்கி வருகிறார்கள். ஏற்கனவே சீனு ராமசாமி எச்சரித்தும், அதை அலட்சியப்படுத்திய விஜய்சேதுபதி தற்பொழுது சினிமா வாழ்க்கையின் அழிவின் விளிம்பில் நின்று கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.