சத்யராஜ் மகன் நடிகர் சிபிராஜ் செய்த சம்பவம், இதுக்கு மேல விஜயை அசிங்கப்படுத்த என்ன இருக்கு என்கிற விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது, மேலும் சத்யராஜ் குடும்பத்தினருக்கு என்னாச்சு, இப்படி குடும்பத்துடன் விஜய்யை வெச்சு செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் சத்யராஜ் காலத்திற்கு ஏற்ப தன்னுடைய நிலை பாட்டை மாற்றி கொள்கின்றவர். சினிமாவுக்கு வந்த புதிதில், எம்ஜிஆர் ரசிகராக தன்னை காட்டி கொண்டு, எம்ஜிஆர் மீது பற்று கொண்டவராக எம்ஜி ஆர் ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தி கொண்டு, எம்ஜிஆர் புகழ் பாடி தன்னை சினிமாவில் வளர்த்து கொண்டார், கருணாநிதி புகழ் பாடி, தன்னை ஒரு பெரியாரிஸ்டாக காட்டி கொண்டார் சத்யராஜ்.
திமுக அனுதாபியாக தன்னை வெளிப்படுத்தி வரும் சத்யராஜ், பல மேடைகளில் இதற்கு முன்பு விஜய்யை புகழ்ந்து பேசியது உண்டு, இந்நிலையில் விஜய் புதியதாக கட்சி தொடங்கிய நிலையில், சமீபத்தில் நடிகர் விஜயின் கட்சியில் சேருவீர்களா என்று கேட்டதற்கு, பெரியார்தான் அந்த கட்சியின் கொள்கை தலைவராக இருப்பதால், கொள்கை பரப்பு செயலாளர் பதவி கிடைத்தால் விஜய் கட்சியில் சேர்ந்து விடுவேன் என தெரிவித்த சத்யராஜ்.
நம்ம விஜய்தான், கேட்டால் கொடுத்து விடுவார் என்றும் கிண்டலாகவும் சத்யராஜ் பேசி இருந்தார். இந்நிலையில் திமுக அனுதாபியான சத்யராஜ் மகள் சமீபத்தில் திமுகவில் இணைந்த பின்பு, நடிகர் விஜய் இன்னும் களத்தில் இறங்கியே வேலை செய்யவில்லை, நான் இன்னும் அவர் களத்தில் இறங்கி வேலை செய்வதை பார்க்கவில்லை, என நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக போராடி வரும் கிராம மக்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து தனது ஆதரவை கொடுத்தார். அப்போது ஆளும் திமுக அரசை மிக கடுமையாக பேசி இருந்தார் விஜய், இந்த ஒரு சுழலில், நடிகர் சத்யராஜ் மகன் சிபி ராஜ், அவருடைய சமூகவலைத்தள பக்கத்தில், விஜய் பரந்தூர் சென்ற புகைப்படத்தை பதிவு செய்து கூத்தாடி என்று கேப்சன் போட்டிருந்தார் சிபிராஜ்.
இந்நிலையில் சிபிராஜ் பதிவு செய்திருந்த விஜய் புகைப்படத்தை மட்டும் பார்த்துவிட்டு, விஜய் ரசிகர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சிபிராஜ், என கொண்டாடி வந்தனர், ஆனால் விஜய் பரந்தூர் சென்ற புகைப்படத்தை பகிர்ந்து கூத்தாடி, என்று சிபிராஜ் குறிப்பிட்டத்தின் உள்நோக்கம், விஜய் நல்ல நடிகர், மக்கள் மத்தியில் நன்றாக நடிக்கிறார் என்கிற உள்நோக்கம் தான் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்,
அதுவரை சிபிராஜை பாராட்டி வந்த விஜய் ரசிகர்கள், சிபிராஜை வெச்சு செய்ய தொடங்கியுள்ளார்கள். இதே விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, விஜய் அண்ணா , விஜய் அண்ணா என சிபிராஜ் புகழ்ந்து, தன்னை விஜய் ரசிகராக காட்டி கொண்டு, அவர் நடித்த படத்தை ஓட வைக்க முயற்சி செய்தது மறந்து விட்டதா.? என விஜய் ரசிகர்கள் சிபிராஜை வெச்சு செய்து வருகிறார்கள்.
இப்படி சத்யராஜ் மகள் திமுகவில் இணைந்த பின்பு விஜய் அண்ணா களத்தில் வேலை செய்ததை நான் இன்னும் பார்க்கவில்லை என்று தெரிவித்தது, தற்பொழுது சத்யராஜ் மகன் சிபி சத்யராஜ் , நடிகர் விஜய் புகைப்படத்தை பகிர்ந்து கூத்தாடி என்று குறிப்பிட்டுள்ளது, அப்படி என்ன தான் விஜய் மீது சத்யராஜ் குடும்பத்திற்கு இந்த கோபம் என்கிற கேள்வி எழுந்துள்ளது.