விஜய் என்ன ரஜினியா.? ரஜினி மாதிரியெல்லாம் ஈசியாக விஜயை காலி செய்து விட முடியாது என நிரூபித்த விஜய்…

0
Follow on Google News

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டு, அவருடைய அரசியல் நகர்வுகளை சாதுர்யமாக நகர்த்தி வருகிறார், அந்த வகையில் தமிழ்கத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு, அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் மொத்தம் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் மாணவ மனவியர்களை கௌரவ படுத்தினார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசும் பேச்சு நிச்சயம் அரசியல் இருக்கும் என்பதால் சினிமா மற்றும் அரசியல் துறை சார்ந்த நபர்களால் உற்று நோக்கப்பட்டது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்தது போன்றே, விஜய்யின் அரசியல் பேச்சு இடம் பெற்று இருந்தது. மேடையில் விஜய் பேசிய பேச்சுக்களில் இடம்பெற்ற குறிப்பாக அரசியல் குறித்து அவர் பேசியது அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்பட்டு வருகிறது.

அதில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் விஜய் பேசிய போது, நாளைய வாக்காளர்களான நீங்கள் தான் ஓட்டுபோட்டு புதிய நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். நம் கைகளைக் கொண்டு நம் கண்களை குத்தும் செயல் நடக்கிறது. காசு வாங்கி கொண்டு வாக்கு செலுத்துகிறோம். ஒரு தொகுதியில் 15 கோடி ரூபாய் செலவு செய்தால் அதற்கு முன்பு அவர் எவ்ளோ சம்பாதித்து இருப்பார்கள்?. பணம் கொடுப்பவர்கள் தோல்வியடைந்தால், அது நீங்கள் கொடுக்கும் பரிசு.

பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று மாணவ, மாணவிகள் பெற்றோரிடம் கூற வேண்டும். பாடப்புத்தகங்களை தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். பாடப்புத்தகங்களை தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்” என பேசினார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டு, தன்னுடைய கைகளை உயர்த்தி பாபா முத்திரையை காண்பித்தார், இதனால் அஜித் மதம் சார்ந்த அரசியலை கையில் எடுக்கிறார், குறிப்பாக பாஜகவின் தூண்டுதலின் பேரில் ரஜினி கட்சி தொடங்க இருக்கிறார், ரஜினி பின்னணியில் இருந்து இயங்கி வருவது பாஜக தான் என்கிற விமர்சனம் எழுந்தது.

மேலும் ரஜினிக்கு எதிராக வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வந்தவர், அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்றும், எதையாவது உளறி மேலும் சர்ச்சையில் சிக்கிய பரிதாபம் அரங்கேறியது, ஆனால், விஜய் பேசிய அரசியல் பேச்சு குறிப்பாக இதுவரை, விஜய் அரசியல் கட்சி தொடங்கி பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கிறார், விஜய் பின்னணியில் இருந்து இயங்குவது பாஜக தான் என்கிற பிம்பத்தை உடைத்து எறிந்துள்ளார் விஜய்.

மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய, பாடப்புத்தகங்களை தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பாக பெரியாரை பற்றி மாணவர்கள் மத்தியில் பேசியது, விஜய்யின் அரசியல் பாஜகவுக்கு நேர்மாறாக அமைத்துள்ளது, அந்த வகையில் விஜயின் அரசியல் என்ட்ரி என்பது திராவிட கட்சிகளுக்கு விழ போகும் பலத்த அடியாக தான் இருக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்.

பெரியார் பெயரை முன்னிறுத்தி விஜய் பேசிய அரசியல் பேச்சு, குறிப்பாக திராவிட சித்தாந்தத்தை பின்பற்றும் பெரியார் ஆதரவாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, அந்த வகையில் விஜய்யின் அரசியல் என்ட்ரி என்பது, திராவிட கட்சிகளுக்கு இருக்கும் வாக்கு வங்கியை மையப்படுத்தியே தான் இருக்கும் என்பதை தன்னுடைய முதல் அரசியல் பேச்சிலே தெரிவித்து விட்டார் விஜய் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.