Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6121
தனுஷ் சினிமா வாழ்கை முடிந்தது…..வெற்றிமாறன் பின்னணியில் லதா ரஜினிகாந்த்..! என்ன நடந்தது தெரியுமா.? - Dinaseval News

தனுஷ் சினிமா வாழ்கை முடிந்தது…..வெற்றிமாறன் பின்னணியில் லதா ரஜினிகாந்த்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக அறிவித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் தனுஷ் தான் என்று கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்த ஆரம்ப கட்டடத்தில் ரஜினிகாந்த் குடும்பத்தினரிடம் அடங்கி சென்ற தனுஷ், ஒரு கட்டத்தில் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்த பின்பு ஆணவத்துடன் தான் எந்த வகையிலும் ரஜினி குடும்பத்துக்கு குறைந்தவன் இல்லை என்கிற தோரணையில் செயல்பட தொடங்கியுள்ளார்.

மேலும் பல நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கிய தனுஷ் ஒரு கட்டத்தில் எல்லை மீறி சென்றுள்ளார். இதனால் தனுஷ் – ஐஸ்வர்யா இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஆனால் தனுஷ் அடங்குவதாக இல்லை. ஒரு கட்டத்தில் தனுஷ் உச்சத்துக்கு சென்ற பின்பு அவர் நடிக்கும் படங்களில் தனக்கு பிடித்த நடிகைகளை ஜோடியாக நடிக்க சிபாரிசு செய்து தன் வசப்படுத்துவார், ஆனால் அது வெற்றி மாறன் இயக்கும் படங்களில் மட்டும் நடக்காது என கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கிய 5 படங்களில் 4 படங்களில் ஹீரோவாக நடித்தவர் தனுஷ், அந்த நான்கு படங்களும் மெகா ஹிட் கொடுத்த படங்கள். எப்போதெல்லாம் தொடர் தோல்வி படங்களால் சினிமாவில் சரிவை தனுஷ் சந்திக்கிறாரோ, அப்போதெல்லாம் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் வெற்றி பெற்று மீண்டும் அவரை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும், அந்த வகையில் தனுஷ் சினிமா வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்தவர் வெற்றி மாறன்.

தனுஷ் உடன் இருக்கும் அதே நட்பு ரஜினிகாந்த் குடும்பத்தினர் மீது வெற்றிமாறனுக்கு உண்டு என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிறு சிறு பிரச்சனை வந்த போதே ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக தனுஷ்க்கு அட்வைஸ் செய்துள்ளார் வெற்றிமாறன் என்றும், ஆனால் வெற்றிமாறன் அட்வைஸை தனுஷ் அலட்சியமாக புறம்தள்ளியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிந்த பின்பு ரஜினிகாந்த் குடுமபத்தினர் தனுஷ் சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், தனுஷ் கைவசம் பெரிதாக ஏதும் படம் இல்லை, மேலும் அவர் படத்தில் பணியாற்றும் கதையாசிரியர், ஒளிப்பதிவாளர் என ஒவ்வொருவராக விலகி வருவது படத்தின் படப்பிடிப்புக்கு முட்டு கட்டையாக அமைத்துள்ளது.

இப்படி கடும் நெருக்கடியில் இருக்கும் தனுஷ் மீண்டும் தன்னை சினிமாவில் நிலைநிறுத்த, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க அவரை அணுகியுள்ளார். தனுஷை வைத்து இனி படம் இயக்கினால், தனுஷ் மாமியார் லதா ரஜினிகாந்த் அவர்களால் அந்த படம் எவ்வளவு பெரிய பிரச்சனையை சந்திக்கும் என்பதை உணர்ந்த வெற்றிமாறன், தற்போதைக்கு உங்களை வைத்து படம் இயக்க தனக்கு கால்ஷீட் இல்லை நான் ரெம்ப பிசி என கைவிரித்து விட்டார் வெற்றிமாறன்.

இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கலாம் என நம்பிக்கையுடன் இருந்த தனுஷ், மேலும் மாமியார் கொடுக்கும் நெருக்கடியால் தன்னுடைய சினிமா வாழ்க்கையை இழந்து நாடு ரோட்டில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தனக்கு பிடித்த பல நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு பெற்று தந்த தனுஷ் தற்போது அவர் வாய்ப்பு கேட்டு நிற்கும் அவலத்தை பார்த்து சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள் பரிதாபப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தேடி சென்ற சங்கரை அசிங்க படுத்தி அனுப்பிய இளையராஜா…! எதற்கு தெரியுமா.?

error: Content is protected !!