தொலைபேசி மூலம் வந்த எச்சரிக்கை..போராட்டத்தை கைவிட்டு பெட்டி பாம்பாக அடக்கிய ஜோதிமணி..! எங்கிருந்து வந்த அழைப்பு தெரியுமா.?

0
Follow on Google News

2014 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழந்த ஜோதிமணிக்கு மீண்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் கரூர் நாடாளுமன்ற தேர்தலில் ஜோதிமணி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர் தற்போது அமைச்சராக இருக்க கூடிய செந்தில் பாலாஜி.இதன் பின்பு கரூர் மாவட்ட அரசியல் களத்தில் ஜோதிமணியும் செந்தில்பாலாஜியும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்ற பின்பு, திமுக மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் என்கிற முறையில் கரூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் செந்திபாலாஜிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செந்திலாபாலாஜிக்கு நிகராக தனக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ஜோதிமணி விருப்புவதாக கூறபடுகிறது.

இந்நிலையில் தன்னை விட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால், சில முக்கிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஜோதிமணி புறக்கணித்து வந்ததாக கூறபடுகிறது. மேலும் செந்தில் பாலாஜி மீது அமலாக்க துறை விசாரணை நடைபெற்று வருவதால் விரைவில் அவர் சிறைக்கு சென்று விடுவார். அதனால் கரூர் மாவட்ட அரசியலில் செந்தில் பாலாஜி நிலைத்து நிற்க முடியாது என நெருக்கமானவர்களிடம் ஜோதிமணி தெரிவிக்க, இது செந்தில் பாலாஜி காதுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் ஒரு ஒன்றிய கவுன்சிலர், ஒரு மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதற்கான பரப்புரை நேற்று அக்டோபர் 7 ஆம் தேதியோடு முடிவடைந்தது. இதில் செந்தில் பாலாஜி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் ஜோதிமணி இதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள ஜோதிமணி விருப்பம் தெரிவித்தும் திமுக தரப்பில் இருந்து புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கப்படும் முகாமை கரூர் மாவட்டத்தில் நடத்தப்படுவதற்கு கலெக்டர் பிரபு சங்கர் ஆறு மாதங்களாக தேதி கொடுக்க மறுக்கிறார் என்றும், அதனால் அவரை எதிர்த்து மாவட்டர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார் ஜோதிமணி. இது ஆளும் கட்சி திமுகவுக்கு எதிர்கட்சியினர் மத்தியில் கடும் விமர்சனகள் உண்டாக்கியது.

இதனை தொடர்ந்து ஜோதிமணி மீது கடும் கோபத்தில் இருந்த திமுக தலைவர் உடனே டி.ஆர்.பாலுவை காங்கிரஸ் டெல்லி தலைமையை தொடர்பு கொண்டு இது குறித்து பேச சொல்ல உடனே டி.ஆர். பாலு எங்க தயவில் எம்பியாக வெற்றி பெற்று எங்களையே எதிர்த்து போராட்டம் நடத்துவது தான் கூட்டணி தர்மமா.? என கடுமையாக காங்கிரஸ் தலைமையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் டி ஆர்.பாலு. . இதனை தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் தலைமை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியை தொடர்புகொண்டு இது பற்றி பேசியுள்ளனர்.

கே.எஸ் அழகிரி தனக்கும் ஜோதிமணிக்கு இருக்கும் பழைய பகையை மனதில் வைத்து மேலும் ஜோதிமணி மீது புகாரை தெரிவிக்க உச்சக்கட்ட கோவத்துக்கு சென்ற காங்கிரஸ் டெல்லி தலைமையிடம் இருந்து ஜோதிமணிக்கு தொலைபேசி அழைப்பு மூலம் வந்த எச்சரிக்கையை தொடர்ந்து போராட்டத்தை விலக்கிக் கொண்ட ஜோதிமணி தனது வீட்டில் பெட்டி பாம்பாக அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.