ஆந்திராவின் வரலாறு காணாத கனமழை… திருமலையில் மலைப் பாதைகளில் நிலச்சரிவு…

0
Follow on Google News

ஆந்திராவில் வரலாற்று காணாத கடும் மழை பெய்து வருவதால் திருப்பதி திருமலை சாலைகள் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து 2 நாட்களாக கடுமையான கனமழை பெய்து வருகிறது. இதில் திருப்பதியில் உள்ள சுவர்ணமுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் ஆற்றின் அருகே கட்டப்பட்ட வீடு ஒன்று வெள்ளப்பெருக்கால் சரிந்து விழுந்தது.

மேலும் கடுமையான மழை பெய்து வருவதால் புண்ணியத் தலமான திருமலையில் உள்ள ஜாம்பவான் அனுமான் கோயிலுக்குள் மழைநீர் உள்ளே புகுந்து. மேலும் திருமலைக்கு செல்லும் வழிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் மரம் மற்றும் பாறைகளில் மண்சரிவு போன்றவைகள் ஏற்பட்டு உள்ளதால் அதனை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மரம் மற்றும் பாறைகளை அப்புறப்படுத்தி சீர்செய்யும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருமலைக்கு பாதயாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி சுவர்ணமுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் கரையோரம் இருந்த வீடு ஒன்று சரிந்து ஆற்றில் விழுந்தது.

வீடு சரிந்து விழும் முன்பே வீட்டில் உள்ள அனைவரும் வெளியேறியதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. திருப்பதி சமூக வலைத்தளத்திலும் இந்த வீடியோ பிரபலமாக வைரலாகி வருகிறது.