கவுதம் கம்பீருக்கு வந்த மிரட்டல்… வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!

0

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீர்ர கௌதம் கம்பீர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவருக்கு டெல்லியில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது.

அதில் வெற்றி பெற்ற அவர் இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற பயங்கரவாத அமைப்பிடம் இருந்து இ மெயில் மூலமாக மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், அதனால் அவரது வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதாகவும், டெல்லி போலிஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here