கதவை பூட்டி வைத்து கொண்டு கம்பு சுத்தும் ஜெய்பீம் இயக்குனர்..! யோவ் அதை உங்க ஓனர் சூர்யாவை சொல்ல சொல்…

0
Follow on Google News

ஜெய்பீம் படம் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இது குறித்து பிரபல எழுத்தாளர் மரித்தாஸ். ஒரு புத்தகம் என்ன பாதிப்பை உருவாக்குமோ, அதைவிட சமூகத்தில் பல ஆயிரம் மடங்கு அதிகம் பாதிப்பை உருவாக்கக் கூடிய சக்தி திரைத்துறைக்கு உண்டு. எனவே இந்த முயற்சி எவர் எடுத்தாலும் வரவேற்பது ஒரு மனிதனின் கடமை. சமீபத்தில் அந்த விதமான ஒடுக்கப்பட்ட மக்கள் குரலாக ஜெய்பீம் வந்துள்ளது என உங்கள் படக் குழுவினர் பிரச்சாரம் செய்கிறீர்கள்.

ஆனால் அதில் கடுமையான சச்சரவுகள் கிளம்பிய நிலையில் திடீர் என சூர்யா அவர்களைக் காணவில்லை. இயக்குநர் வந்து விளக்கம் கொடுக்கிறார். ஆனால் அந்த விளக்கம் மேலும் கேலி செய்வது போல் தான் உள்ளது. மேலும் 2.04.00 நிமிடத்தில் வைக்கப்பட்டுள்ள காட்சியில் கொடூரமான ஈவு இரக்கம் இல்லாத ஒரு போலீஸ் வீட்டில் உள்ள காலண்டர் வன்னியச் சமூகத்தைப் பிரதிபலிக்கும் அக்னி கலசம் வைத்தது சரியா? தற்போது அது இந்து கடவுளான லட்சுமி தேவி காலண்டர் மாற்றியுள்ளது அதைவிடத் தவறு இல்லையா?

இன்று ஜெய்பீம் படம் உருவாக்கவேண்டிய ஆரோக்கியமான கருத்து விடுத்துச் சாதி சண்டை அல்லவா தூண்டிவிட்டுள்ளது. இது சூர்யா அவர்களுக்குத் தெரியாமல் நடந்ததா, தெரிந்து நடந்ததா என்பதைத் தாண்டி, இதற்கு சமூகம் அடைந்துள்ள அமைதியின்மைக்கு வருத்தம் தெரிவிப்பதோடு, இதைச் செய்தவர் யார் எனக் கண்டு மன்னிப்பு கேட்டிருந்தால் சமூகம் இவ்வளவு சச்சரவுகளைச் சந்திக்க அவசியம் இல்லையே? அந்த பொறுப்பு சூர்யா அவர்களிடம் உள்ளது தானே!

ஒரு சாதாரண காலண்டர் இவ்வளவு செய்யும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை, கவனிக்கவில்லை, தெரியாமல் நடந்துவிட்டது என்று இயக்குநர் சொல்வது, பேச்சுக்கு வேண்டும் என்றால் சொல்லலாமே ஒழிய மேலே படத்தின் அனைத்து காட்சிகளிலும் காலண்டர் சரியாக குறீயிட்டுடன் வைத்தவர்கள் சரியாக போலீஸ் அதிகாரி வீட்டில் கொலை நடந்த நேரத்தில் உச்சக்கட்ட மோசமான மிருகமாக உருவகப்படுத்திப் படக்காட்சி அமைக்கும் அந்த நொடியில், பின்புலத்தில் குறிப்பிட்ட சமூகத்தைக் குறிக்கும் அக்னிகலசம் குறியீடாக வைப்பது எவ்வளவு பெரிய அருவருக்கத்தக்கச் செயல்?

உண்மைக் கதையில் அனைத்து மக்களும் போராடி, அந்த அநியாயத்திற்கு நீதி வாங்கி கொடுத்த நிலையில் – படத்தில் குறிப்பிட்ட சமூகத்தையே கொடூரமான ஜாதி வெறியர்களாக முத்திரை குத்துவது சமூக அமைதியைக் கெடுக்கும் வேலை இல்லையா? ராஜகண்ணு – பார்வதி தம்பதியினருக்கு நடந்தது ஒரு அநியாயம் என்றால் அதை வைத்து, கதையை திரித்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது அந்த ஒட்டுமொத்த பழியைப் போட்டு குற்றவாளியாக உருவகப்படுத்துவதும் அநியாயம் இல்லையா?

இதற்கு உரிய விளக்கத்தை சூர்யா மற்றும் ஜெய்பீம் படக்குழுவிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கிறோம். உரியவர் மன்னிப்பு கோருவது தான் நியாயம் என கருதுகிறேன் என மரித்தாஸ் தெரிவித்திருந்தார். மேலும் அவர் வெளியிட்ட வீடியோவில் ஜெய்பீம் இயக்குனரின் செயல் உச்சக்கட்ட அயோக்கியத்தனம் என தெரிவித்திருந்தார். இதற்கு ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் தனது டிவீட்டர் பக்கத்தில், இது அயோக்கிய கும்பல்… -இப்படிக்கு மனிதருள் மாணிக்கம் மாரிதாஸ்..

அன்பான தமிழ் மக்களே.. யோக்கியன் வந்துட்டாரு . மறக்காம சொம்ப எடுத்து உள்ள வைங்க..என தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்து, அந்த பதிவுக்கு யாரும் பதில் கருத்து தெரிவிக்காதபடி கமெண்ட் ஆஃசனை ஆப் செய்து வைத்துள்ளார். இதற்கு வலைதளவாசிகள் யோவ்..கமெண்ட் ஆஃசனை ஆப் செய்து வைத்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு கம்பு சுத்த வேண்டாம். இதை உன் ஓனர் சூர்யாவை சொல்ல சொல் என பதிலடி கொடுத்து வருவது குறிப்பிட தக்கது..