நன்றி உணர்வில்லாமல் என்னை ஏமாற்றிய சூர்யா முகத்தில் கறியை பூசாமல் விடமாட்டேன்.. இயக்குனர் ஹரி சபதம்..! எதற்கு தெரியுமா.?

0

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படம் வருவதற்கு முன்பு சூரரைப் போற்று படம் வெளியானது. இந்தப் படம் முடித்த கையோடு இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தமானார். ஒன்று, ஹரி இயக்கத்தில் அருவா, மற்றொன்று வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’. முதலில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது, தொடர்ந்து 8 படங்கள் வரை தோல்வி படங்களை கொடுத்து வந்த சூர்யா கடந்த வருடம் வெளியான சூரரை போற்றும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு மெகா ஹிட் படங்களை கொடுத்து வந்த இயக்குனர் ஹரியிடம் சூரரை போற்று படத்தில் நடித்த போதே அடுத்த படத்துக்கான கதை தயார் செய்ய கேட்டு கொண்டுள்ளார், இதனை தொடர்ந்து அருவா படத்தை சூர்யாவுக்காக தயார் செய்துள்ளார், கதையை கேட்ட சூர்யா அருமையாக இருக்கு விரைவில் இந்த படத்துக்கான தயாரிப்பாளரை ஏற்பாடு செய்கிறேன் என சூர்யா உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

இதே போன்று வெற்றிமாறனிடமும் கதை கேட்டுள்ளார் சூர்யா, அந்த படத்துக்கு வாடிவாசல் என பெயரிடப்பட்டது, ஆனால் இருவரிடமும் கதையை கேட்டுவிட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பை தொடங்கினர் சூர்யா. இது இயக்குனர் ஹரிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. பாண்டிராஜ் இயக்கிவரும் எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்த கையோடு, வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு துவங்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

இதனை தொடர்ந்து சூர்யாவுக்காக கதையை தயார் செய்துவிட்டு காத்திருந்த இயக்குனர் ஹரி, முறையான பதில் ஏதும் வராத காரணத்தினால் ஏமாற்றம் அடைந்து வேறு ஒரு நடிகரை வைத்து படமாக்க முடிவு செய்த ஹரியிடம் சினிமா துறையை சேர்ந்த ஒருவர், கோவித்து கொள்ளாதீர்கள், நீங்க எடுத்த கடைசி படம் சாமி இரண்டாம் பாகம் தோல்வியை தழுவியதை தொடர்ந்து உங்கள் இயக்கத்தில் நடிக்க சூர்யா தயக்கம் காட்டுகிறார், மற்றொரு கதையில் உங்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பமாக உள்ளார் என தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு கடுப்பான இயக்குனர் ஹரி, அவர் யாருய்யா எனக்கு வாய்ப்பு கொடுக்க, நான் எடுத்த ஒரு படம் தோல்வி, அவர் கடைசியா நடித்த 9 படம் தோல்வி, ஏன் அவரை வைத்து இயக்குனர்கள் படம் எடுக்க முன்வர வில்லையா என தெரிவித்தவர் உடனே தனது மைத்துனர் நடிகர் அருண் விஜய்யை வைத்து தனது புதிய படத்தை தொடங்கினார் இயக்குனர் ஹரி. கிராமத்துக்கு கதையான இந்த படத்தின் ஒவ்வொரு கட்சியையும் மக்கள் ரசிக்கும்படி எடுத்து வருகிறார் இயக்குனர் ஹரி.

இந்த புதிய படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார், இவர்களுடன் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார்,புகழ், அம்மு அபிராமி மற்றும் ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர்.படப்பிடிப்பின் உணவு இடைவேளையின் போது தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய இயக்குனர் ஹரி, நான் இயக்கி சூர்யா நடித்த அணைத்து படங்களிலும் சூர்யாவை தவிர மற்ற யார் நடித்திருந்தாலும் படம் வெற்றி பெற்றிருக்கும் ஆனால் நன்றி உணர்வு இல்லாமல் என்னை காக்க வைத்து ஏமாற்றிய நடிகர் சூர்யா முகத்தில் கறியை பூசியது போன்று தற்போது நான் இயக்கும் புதிய படம் மிக பெரிய வெற்றியை பெரும் என ஹரி நம்பிக்கையுடன் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here