வருத்தம் கேட்டும் விடாத ஜெய்பீம் சர்ச்சை… சூர்யா எடுத்த முடிவு!

0

நடிகர் சூர்யா ஜெய்பீம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை மறப்பதற்காக குடும்பத்தோடு துபாய்க்கு சென்றுள்ளாராம். சூர்யா நடித்து தயாரித்த ஜெய் பீம் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி பாராட்டுகளையும் சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது. படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகமக்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது சம்மந்தமாக பாமகவினர் சூர்யாவின் மிது கோபத்தில் உள்ளனர். திரைத்துறையினர் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையிக் சூர்யா உயிருக்கு ஆபத்து இருப்பதால் சூர்யாவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 ஆயுதம் தாங்கிய போலிஸார் அவர் வீட்டுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று சூர்யாவுக்கு என்று தனியாக இரண்டு ஆயுதந்தாங்கிய போலிஸார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் சூர்யா எங்கு சென்றாலும் கூடவே சென்று பாதுகாப்பு அளிப்பார்கள் என சொல்லபடுகிறது.இதையடுத்து பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் படத்தின் இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டும் இன்னும் பிரச்சனை முடியவில்லை.

இதனால் மன வருத்தத்தில் இருக்கும் சூர்யா மன மாற்றத்துக்காக இப்போது துபாய்க்கு தனது குடும்பத்தினரோடு சென்று அங்கு சில நாட்கள் தங்க இருக்கிறாராம். பிரச்சனைகளின் தாக்கம் குறைந்ததும் அவர் இந்தியா திரும்பி வருவார் என சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here