பான் மசாலா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய சூப்பர் ஸ்டார்!

0

இந்திய சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப் பச்சன் கம்லா பசந்த் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொண்டாடிய சூப்பர் ஸ்டார் நடிகராக அறியப்பட்டவர் அமிதாப் பச்சன். ஆனால் 2000க்குப் பிறகு அவர் படங்களுக்கு வரவேற்பு இல்லாததால் அவர் குணச்சித்திர வேடங்களுக்கும் வயசுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்கவும் தொடங்கினார். அதை தொடர்ந்து இப்போது வரை பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் பல பொருள்களுக்கு விளம்பரத் தூதுவராக செயல்பட்டு வருகிறார். அப்படி அவர் நடித்த ஒரு பான்மசாலா நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடித்தார். ஆனால் அதற்கு எதிர்ப்புக் கிளம்பவே இப்போது ஒப்பந்தம் முடிந்த பின்னரும் அந்த விளம்பரம் ஒளிபரப்பப் படுவதாக அந்த நிறுவனத்துக்கு நீதிமன்றம் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here