நிறுத்தப்பட்ட கமலின் விக்ரம் படப்பிடிப்பு… ஆனாலும் பாதிப்பு இல்லை!

0

கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு கடந்த இரு தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்க அனிருத் முதல் முதலாக கமல் படத்துக்கு இசையமைக்கிறார்.

பெரும்பாலான காட்சிகளை கமலைக் கொண்டு இப்போது லோகேஷ் படமாக்கியுள்ளார். குறுகிய கால படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங்கை விரைவிலேயே முடித்து ரிலீஸ் செய்ய உள்ளார்களாம். 2022 ஆம் ஆண்டு கோடையை முன்னிட்டு மார்ச் 31 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூரில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.

ஆனால் கொரோனாவால் கமல் பாதிக்கப்பட்டதால் இப்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாம். ஆனால் கமல் சம்மந்தம் இல்லாத காட்சிகளை எல்லாம் அங்கு படமாக்கி முடித்துவிட்டதால் பெரிதாக பாதிப்பு எதுவும் இல்லையாம். அதனால் கமலின் காட்சிகளை பின்னர் தனியாக படமாக்கிக் கொள்ள உள்ளார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here