கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மதுபான விலையில் தள்ளுபடி… மாநில அரசு அறிவிப்பு!

0
Follow on Google News

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவில் துரிதமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநில அரசுகள் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கை 100 கோடி என்ற சாதனையைப் படைத்துள்ளது. ஆனால் இன்னமும் நாம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை.

இதனால் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்ட நிர்வாகங்கள் ஒரு நூதனமான அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

அது என்னவென்றால் அந்த மாவட்டங்களில் மதுபானங்கள் வாங்க வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழைக் காட்டினால் அவர்களுக்கு மதுபானம் சலுகை விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கவா அல்லது அதிகளவில் மதுபானம் விற்பனையை ஊக்குவிக்கவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.