மாநாடு ரீமேக் உரிமைக்கு போட்டா போட்டி!

0
Follow on Google News

மாநாடு படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு ரீமேக்குக்கு மிகப்பெரிய அளவில் போட்டி உருவாகியுள்ளது.
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா மற்றும் எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்த படம் பல பிரச்சனைகளைத் தாண்டி நவம்பர் 25 ஆம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டு சிறப்புக் காட்சி எல்லாம் ரத்து செய்யப்பட்டாலும் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது. இதற்கு முன்னர் வெளியான சிம்பு படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை எல்லாம் மாநாடு முறியடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு வெளியான படங்களில் அண்ணாத்த, மாஸ்டர், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பிறகு மிகப்பெரிய ஓபனிங் மாநாடு படத்துக்குதான் கிடைத்துள்ளதாம். முதல் நாளில் 8 கோடி வசூலித்த மாநாடு அதற்கடுத்த நாட்களில் அதிக வசூலை செய்து வருகிறதாம்.

இந்நிலையில் மாநாடு படத்தின் இமாலய வெற்றியால் மற்ற மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியில் ஒரு முன்னணி நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு ரீமேக் உரிமையை கேட்டுள்ளதாம். அதே போல தெலுங்கிலும் ரீமேக் உரிமை நல்ல தொகைக்கு விலை போக உள்ளதாக சொல்லப்படுகிறது.