சதமடிக்காதது குறித்து வருத்தம் இல்லை… புஜாரா சொல்லும் காரணம்!

0

இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் சித்தேஸ்வர் புஜாரா 22 போட்டிகளாக சதமடிக்காமல் உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் கோலிக்கு நிகரான அனுபவம் கொண்ட வீரர் என்றால் அது புஜாராதான். இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய சுவர் என்று அவரை ரசிகர்கள் வர்ணிக்கின்றனர். அவர் இதுவரை 90 போட்டிகளில் விளையாடி 18 சதங்களை அடித்துள்ளார்.

ஆனால் கடந்த 22 போட்டிகளாக அவர் சதமடிக்கவில்லை. ஆனால் அணியைக் காப்பாற்றும் சில அற்புத இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார். இந்நிலையில் சதமடிக்காதது குறித்து பேசியுள்ள அவர் ‘ நான் சதமடிக்கவில்லை என்பது எனக்கும் தெரிகிறது. ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் நான் சில 80, 90 ரன்கள் இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறேன்.

அணியின் ஸ்கோரை அதிகரிப்பதே என் இலக்கு. அப்படி ஆடினால் என்னால் சதம் அடிக்க முடியும். அதனால் என்னுடைய டெக்னிக்கில் எந்த மாற்றமும் இல்லை.’ எனக் கூறியுள்ளார். அணியில் நிறைய இளம் வீரர்கள் காத்திருக்கும் நிலையில் புஜாராவின் இடம் சமீபகாலமாக கேள்விக்கு உள்ளாகியுள்ளது என்பது மறுக்க முடியாததாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here