விஜய் ஹசாரே கோப்பைத் தொடர்… தமிழ்நாடு அணியில் இருந்து நடராஜன் நீக்கம்!

0

தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் TNPL மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக பந்துவீசி இந்திய தேர்வாளர்களின் கவனத்தைப் பெற்றார்.

மிகவும் பின் தங்கிய பொருளாதார பின்னணிக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த நடராஜன் இந்திய அணிக்காக விளையாடிய போது தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியில் டி 20 தொடருக்கான அணியில் மட்டுமே அவர் இடம் பிடித்திருந்தார். ஆனால் அடுத்தடுத்து வீரர்கள் காயம் அடைந்ததால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் என வடிவங்களிலும் அறிமுகமானார்.

அந்த தொடரில் அவர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தினாலும், அடுத்து காயமடைந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். காயத்தில் இருந்து மீண்ட நிலையில் அவர் சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடினார். நடந்து முடிந்த அண்ட்த தொடரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

இதையடுத்து உடனடியாக விஜய் ஹசாரே கோப்பைத் தொடர் நடக்க உள்ள நிலையில் அந்த தொடரில் இருந்து நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக காயத்தில் இருந்து மீண்ட தினேஷ் கார்த்திக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியவர்கள் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here