கான்பூர் டெஸ்ட்… இரு அணிகளுக்கும் சம வெற்றி வாய்ப்பு!

0
Follow on Google News

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் கான்பூர் டெஸ்ட்டில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.கான்பூரில் நடந்து இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இப்போது இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. நான்காம் நாள் ஆட்டத்தில் இன்று இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருகின்றனர்.

முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இந்தியா 345 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய நியுசிலாந்து 296 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 49 முன்னிலை பெற்றது.இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 234 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி 65 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் நியுசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 284 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியுசிலாந்து நான்காம் நாள் ஆட்டமுடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் சேர்த்துள்ளது. நாளை ஐந்தாம் நாளில் 9 விக்கெட்கள் கைவசம் இருக்க, 280 ரன்கள் சேர்க்க வேண்டும். இதனால் இரு அணிகளுக்குமே வெற்றி மற்றும் தோல்வி வாய்ப்பு சம அளவில் உள்ளது.