கமலின் உடல்நிலை சீராக உள்ளது… மருத்துவமனை அறிக்கை!

0

நடிகர் மற்றும் அரசியல்வாதி கமல்ஹாசன் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் இப்போது விக்ரம் படப்பிடிப்பு மற்றும் பிக்பாஸ் படப்பிடிப்பு என பிஸியாக வலம் வந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் அவர் அமெரிக்கா சென்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தோன்றியதை அடுத்து

மருத்துவமனையில் சோதனை செய்துகொண்டதில் தொற்று உறுதியானது. இதையடுத்து இப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ல போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் தினமும் அவர் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘கமல்ஹாசன் தொடர்ந்து கோவிட் 19 க்கான சிகிச்சையில் இருக்கிறார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here