ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறாரா பாண்டிராஜ்? அவரே அளித்த விளக்கம்!

0

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த பிறகு யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் வசூல் நிலவரங்களால் அதிருப்தி அடைந்து உடனடியாக ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்போது தீவிர ஆலோசனையில் இருக்கிறார்.

அதே சமயத்தில் தனது உடல்நிலையை பாதிக்காத வகையில் கதை இருக்கவேண்டும் என்றும் நினைக்கிறார். இந்நிலையில் குடும்பக் கதைகளை இயக்கி வரிசையாக வெற்றி பெற்று வரும் பாண்டிராஜ் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்து ரஜினியை இயக்க உள்ளதாக செய்திகள் சமூகவலைதளங்களில் பரவின.

ஆனால் அந்த தகவலை பாண்டிராஜ் தரப்பு மறுத்துள்ளது. இதுவரை கதை சொல்வதற்காக ரஜினியை சந்திக்கவில்லை என்றும் இந்த தகவல் வதந்தி என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ்தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்றும் தகவல் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here