முதல் விக்கெட்டுக்குப் பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியா… கில் அரைசதம்!

0

கான்பூரில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நியுசிலாந்து அணிக்கெதிரான டி 20 தொடருக்குப் பின் இன்று கான்பூரில் முதல் டெஸ்ட் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கேப்டன் கோலி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் ஆடவில்லை. இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். டாஸை வென்ற இந்திய கேப்டன் அஜிங்க்யே ரஹானே பேட்டிங் செய்ய முடிவு எடுத்தார். இதையடுத்து இளம் வீரர்களான மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் கைல் ஜேமிசன் பந்துவீச்சில் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் சுவர் என்று வர்ணிக்கப்படும் புஜாரா கில்லுடன் இணைந்தார்.
வழக்கம்போல புஜாரா நங்கூரம் பாய்ச்சி நிற்க கில் சற்று நிதானமாக ரன்களை சேகரித்தார்.

இதையடுத்து அவர் தன்னுடைய அரைசதத்தை பூர்த்தி செய்தார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 82 ரன்கள் சேர்த்துள்ளது. கில் 52 ரன்களுடனும் புஜாரா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here