இயக்குனர்களின் வேலைகளில் மூக்கை நுழைக்கும் தனுஷ்!

0
Follow on Google News

நடிகர் தனுஷ் இப்போது தனது நண்பர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் தனது நடிப்பிற்காக இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றவர். இப்போது அவர் கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இப்போது அவர் மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களின் இயக்குனர்களும் இப்போது தனுஷின் மேல் செம்ம அப்செட்டில் இருக்கிறார்களாம். ஏனென்றால் படப்பிடிப்புத் தளத்தில் தனுஷ் இயக்குனர்களின் வேலைகளில் தேவைக்கு அதிகமாக மூக்கை நுழைக்கிறாராம்.

இதனால் படப்பிடிப்புத் தளத்தில் இவ்விரு படங்களின் இயக்குனர்களும் சங்கடத்தில் உள்ளார்களாம். முன்பு இதே போல கமல்ஹாசனும் இயக்குனர்களின் வேலைகளில் மூக்கை நுழைப்பார் என்ற குற்றச்சாட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.