கொரோனா பாதிப்பு… சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நடன இயக்குனர் சிவசங்கர்!

0
Follow on Google News

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு நடனமைத்தவர் சிவசங்கர். இவர் நடன இயக்குனராக மட்டுமல்லாது ஒரு நடிகராகவும், திரைத்துறையில் பலருக்கு நண்பராகவும் அறியப்படுபவர். அஜித் நடித்த வரலாறு திரைப்படத்தில் இவர் அஜித்துக்காக நடனப்பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தவர்.

அதுபோல விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் பல பாடல்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்துள்ளார். சமீபகாலமாக பெரிதாக வாய்ப்புகள் இல்லை என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

இந்நிலையில் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உதவுமாறு அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதைக் கேட்டு சோனு சூட் மற்றும் தனுஷ் உதவியதாக சொல்லப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.