கவலைக்கிடமான நிலையில் நடன இயக்குனர் சிவசங்கர்!

0

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு நடனமைத்தவர் சிவசங்கர். இவர் நடன இயக்குனராக மட்டுமல்லாது ஒரு நடிகராகவும், திரைத்துறையில் பலருக்கு நண்பராகவும் அறியப்படுபவர். அஜித் நடித்த வரலாறு திரைப்படத்தில் இவர் அஜித்துக்காக நடனப்பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தவர். அதுபோல விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் பல பாடல்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்துள்ளார்.

சமீபகாலமாக பெரிதாக வாய்ப்புகள் இல்லை என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு போதுமான பொருளாதார வசதி இல்லாததால் திரையுலகினரின் உதவியை நாடி அவரது குடும்பத்தினர் வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here