மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும்… பிரதமர் மோடி அறிவிப்பு!

0
Follow on Google News

மத்திய அரசு கொண்டு மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களும் திரும்பப் பெறப்படும் என இன்று காலை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களுக்கும் விவசாயிகள் மத்தியில் வரவேற்பு இல்லை. இதையடுத்து டெல்லியில் விவசாயிகள் ஒன்று கூடி ஆறு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் உலக அளவில் விவாதப் பொருளாகியது. ஆனால் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்பதில் மோடி அரசு உறுதியாக இருந்தது. இந்நிலையில் இப்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘விவசாயிகளுக்காகக் கொண்டுவரப் பட்டதே இன்று மூன்று சட்டத் திருத்தங்களும்.

ஆனால் விவசாயிகளை எங்களால் சமாதானப் படுத்த முடியவில்லை. இதனால் அந்த சட்டத் திருத்தங்கள் திரும்பப் பெறப்படும். அதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்ப பெற வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.