6 மணிநேரத்தில் ரூபாய் ₹ 52,000 கோடி இழப்புகளை சந்தித்த பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்… என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

மனித வாழ்க்கையில் இன்று அத்தியாவசிய பொருட்களில் ஸ்மார்ட் போன் ஓன்று என்றாகி விட்டது, அதில் முகநூல்,வாட்ஸ் ஆஃப், போன்ற சமூக ஊடகங்கள் மனித வாழ்க்கையில் ஒரு அங்கமாக திகழ்ந்து வருகிறது இந்நிலையில், நேற்று மாலையில் இந்தியா உள்பட பல நாடுகளில் திடீரென சமூக வலைத்தளங்கள் முடங்கின. குறிப்பாக பேஸ்புக் மற்றும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயனாளர்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து இருந்தது. 6 மணி நேர முடக்கத்துக்கு பின்னர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட தளங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தன. பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கியதன் காரணமாக பேஸ்புக் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் சக்கர்பெர்க் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்தது.

சில மணி நேரங்களிலேயே 7 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை மார்க் சந்தித்தார். இது இந்திய மதிப்பில் சுமார் 52 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். சுமார்6 மணி நேரத்திற்கு பிறகு இந்த கோளாறு சரி செய்யப்பட்டது. இதே போன்று கடைசியாக கடந்த 2019ம் ஆண்டில் பேஸ்புக் சேவை முடங்கியது. எனினும், அது ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. தற்போது ஏற்பட்டது மிகப் பெரிய சேவை பாதிப்பு என டவுண்டிடெக்டர் நிறுவனம் கூறியுள்ளது.

ஃபேஸ்புக்கினால் அபார வளர்ச்சி அடைந்து மிக விரைவில் வளர்ந்து உலகின் டாப் 10 பணக்காரர்களுள் ஒருவரானார் மார்க். அமெரிக்க தேர்தலுக்காக மக்களின் தகவல்களை ஃபேஸ்புக் தனியார் நிறுவங்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஃபேஸ்புக் மற்றும் மார்க்கிற்கு ஒரு கரும்புள்ளி என்று கூறலாம். இந்தியத் தேர்தலிலும் இது அரங்கேற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விளக்கங்களை அளித்த மார்க், மன்னிப்பும் கோரினார்.

தடைகளும், குறைகளும் இருந்த போதிலும், இந்த இளம் வயதில் உலகில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு உதாரணமாய் வளர்ச்சி அடைந்துள்ளவர் என்றால் அது மார்க் தான. நேற்று சில மணி நேரம் அவருக்கு சொந்தமான முகநூல் முடக்கப்பட்டத்தில் இந்திய ரூபாய் ₹ 52,000 கோடி இழப்பு என்றால், அவருடையா ஒருநாள் வருமானம் என்ன என்பதை நினைத்து பார்த்தால் ஒரு நிமிடம் தலையே சுற்றிவிடும் என்பதில் ஆச்சரியம் இல்லை.