சீனா தடுப்பு மருந்து வேலை செய்யவில்லை… தோல்வியை தழுவியது சீன தயாரிப்பு.. மீண்டும் சீனாவில் கொரோனா பரவல் உச்சக்கட்டம்..

0

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று தற்போது மீண்டும் சீனாவை ஆட்டி படைக்க தொடங்கியுள்ளது. இது மீண்டும் சீனா மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்திய சீன மக்களும் சிக்கியுள்ளனர். சீனா கொரோனாவில் இருந்து விடுபட்டதாக அறிவித்து தனது நாட்டின் அணைத்து எல்லைகளையும் திறந்தது அந்த நாடு.

தங்கள் நாட்டில் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தை தன் மக்களுக்கு 200 டோஸ்களாக செலுத்தி காத்துகொண்டோம் என பெருமைப்பட்டு கொண்டது சீனா. இதை உலகம் முழுவதும் உள்ள சீன ஆதரவாளர்களான கம்யூனிஸ்ட்கள் பெருமை பட்டு கொண்டனர். மேலும் சீன ஆதரவு செய்தி நிறுவனங்கள் இதற்கு முக்கியத்துவம் அளித்தன. தற்போது சீன தயாரிப்பு கொரோனா மருந்தான சைனோபார்ம், சைனோவிக் ஆகியவை செயல்படாமல் தோல்வியை தழுவியுள்ளது.

சீன தடுப்பு மருந்து முழு தோல்வி எனும் வகையில் சீனாவில் கொரோனா வேகமாக பரவுகின்றது மறுபடியும் அந்த நாட்டு மக்கள் லாக்டவுணுக்குள் சிக்கிவிட்டார்கள். சீன மருந்தை வாங்கிய அதன் நட்பு நாடுகளெல்லாம் கலங்கி நிற்கின்றன, தற்போது பைசர் 3ம் தடுப்பு மருந்தாக செலுத்தபடும் என சீன தடுப்பு மருந்தை பயன்படுத்திய நாடுகள் அறிவித்துவிட்டன‌.மேலும் சீன மருந்து ஒரு ஏமாற்றுவேலை என உலகிற்கு தெரியவர சீனாவுக்கு மிகபெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட உயிர்காக்கும் மருந்தே போலியானது என தகவல் வெளியான நிலையில், அந்த நாடு தயாரித்த ஆயுதம் என்ன வகையில் இருக்கும் என பெரும் குழப்பத்தில் இருக்கிறது சீனாவிடம் ஆயுதம் வாங்கிய பாக்கிஸ்தான். இந்திய மருந்து உலகளவில் நம்பகதன்மை பெற்றுள்ள நிலையில் சீனாவுக்கு மிகபெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here