நான் அம்பாளை டா.. டவுசரை அவுத்து காட்டி ஒண்டிக்கு ஒண்டி வாடா என ரகளையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு.! வைரல் வீடியோ..

0
Follow on Google News

சென்னை அம்பத்தூர் ஒரகடம் அருகே வசித்து வருகின்றவர் கிருஷ்ணகுமார், இவர் கோயம்பேடு போக்குவரத்துக்கழக தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார், இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் காய்கறி வியாபாரி முருகனுக்கும் வண்டி நிறுத்துவது சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்ததாகவும், சம்பவத்தன்று கிருஷ்ண குமார் வீட்டில் மது போதையில் இருந்த போது.

தான் செல்லும் வழியில் மறித்து எப்படி வாகனத்தை நிறுத்தலாம் என கேட்டு, முருகன் வீட்டு வாசலுக்கு சென்று கத்தி கூச்சலிட்டு தகாத வார்த்தைகளால் பேசி, அங்கு நின்ற முருகனின் இரு சக்கர வாகனத்தை எட்டி உதைக்க முயன்று முடியாததால், அதனை தள்ளி விட்டு, அவரின் வீட்டிற்குள் கற்களை எடுத்து வீசியும் முருகன் வீட்டு வாசலில் இருந்த மரத்தை ஒடித்து, அட்ராசிட்டி ஈடுபட்டதோடு, வெளியேவா ஒண்டிக்கு ஒண்டி வீரன் என கர்ஜித்துள்ளார்.

மேலும் தான் அணிந்திருந்த அரைகுறை ஆடைகளை அவிழ்த்து நான் அம்பாளை டா என தெரிவித்து அநாகரிகமாக நடந்து கொண்டார், இந்த கொடுமையெல்லாம் எதிர் வீட்டுக்காரர் ஒருவர் சைலண்டா வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததை அவர் அறியவில்லை,மேலும் இத்தனையும் பொறுத்து கொண்டு வீட்டிற்குள்ளே அமைதியாக இருந்த முருகன் குடும்பத்தினர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்ததால் முருகன் குடும்பத்தினர் அம்பத்தூர் இணை ஆணையரிடம் சென்று புகார் அளித்தனர், இதற்கிடையில் ஏட்டு கிருஷ்ணகுமார் ரகளையில் ஈடுபட்ட வீடியோசமூகவலைதளத்தில் வைரலாகி வருவதையும், தன் மீது புகார் கொடுத்துள்ளதையும் அறிந்து கொண்டு எங்கே தனது வேலைக்கு பங்கம் வந்துவிடுமோ என எண்ணி,கிருஷ்ணகுமார் பவ்வியமாக முருகன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கே சென்று முருகனிடம் புகாரை வாபஸ் பெறக் கோரி மன்னிப்பு கேட்டதாகவும், ஆனால் முருகன் வாபஸ் பெறாததால் தொடர்ந்து கிருஷ்ண குமாரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையில் எத்தனையோ பேர் மக்கள் சேவையில் பல விருதுகளைப் பெற்று பெருமை சேர்த்துக் கொண்டிருக்க. இது போல ஒரு சில அதிகாரிகள் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்