மதுரையில் நடந்த இந்தியாவின் முதல் ஆலய நுழைவு புரட்சி.! பாஜக பொதுச் செயலாளர் CT ரவி சிறப்புரை ஆற்றுகிறார்..

0
Follow on Google News

பட்டியல் சமூக மக்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நுழையத் தடை என்றொரு நிலை இருந்து பின்னர் 1939ல் ஆலய பிரவேசப் போராட்டம் நடந்த பின்னரே அனைத்து சமுகத்தினரும் நுழைய அனுமதிக்கப்பட்டனர். 1937ல் மகாத்மா காந்தி தமிழகம் வந்த போது, இந்து பட்டியல் சமூகத்தினரை கோவிலுக்குள் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து, அதைக் கண்டித்து தானும் மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு செல்ல மறுத்து விட்டார்.

வழக்கறிஞர் வைத்தியநாதய்யர் தலைமையில், அப்போதைய சென்னை ராஜதானியின் பிரதம மந்திரியான ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை தொடர்புகொண்டு பட்டியல் சமூக மக்களின் ஆலய பிரவேசதுக்கு தக்க பாதுகாப்பு கொடுக்குமாறு வேண்டியதை மகிழ்வுடன் ஏற்றுகொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மதுரை முழுவதும் துண்டு பிரசுரங்கள் விடுத்து பிற சமூக மக்களை எக்காரணம் கொண்டும் பட்டியல் சமூக மக்களின் ஆலய பிரவேசிப்பதற்கு பிரச்சனை கொடுக்காது ஒதுங்கி இருக்குமாறு எச்சரிக்கை விடுத்தார்.

8 சூலை 1939ல் காலை 10 மணிக்கு பட்டியல் சமூக மக்கள் வைத்தியநாதய்யர் தலைமையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பாதுகாப்புடன் ஆலயப் பிரவேசம் நடந்தது. ராஜாஜி ஆலயப் பிரவேசத்தை சட்டப் பூர்வமாக அங்கீகரித்து சட்டம் பிறப்பித்தார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த நாளை நினைவு கூறும் நிகழ்வாக, ” இந்தியாவின் முதல் ஆலய நுழைவு புரட்சி” என்கின்ற தலைப்பில், 08/7/2021 அன்று மாலை சரியாக 6.00 மணியளவில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் C. T. ரவி , சிறப்புரை ஆற்றுகின்றார்.

நிகழ்ச்சிக்கான லிங்க்ஐ கிளிக் செய்து கருத்தரங்கில் கலந்துகொள்ளவும்.
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87226287510?pwd=NFFDSlIxTG5TTnRCdVJ2M1hLWjZkQT09
Meeting ID: 872 2628 7510
Passcode: 112233 ஆலயங்களிலும், ஆன்மீகத்திலும் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளார், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பாஜக மாநில பொது செயலாளர், பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன்.