நாள்தோறும் செரி பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா என்று உங்களுக்கு தெரியுமா?

0
Follow on Google News

செர்ரிப்பழம் சிறிய வயது முதல் பெரிய வயது உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள. இது கோக் ,பப்ஸ் போன்ற உணவுகளில் சேர்க்கப்படும். இது பலரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் சேர்க்கப்படும் .குளிர் பிரதேசங்களில் ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி முதலிய ஊர்களில் விலையும் நன்மைகளைப் பற்றி காண்போம்.

தூக்கமின்மை : உடலில் உள்ள நரம்பு கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் செர்ரிப்பழம் அதிகமாக சாப்பிடுவது நல்லது. நரம்பில் உள்ள இறுக்கத்தை தளர்த்தி ஆழ்ந்த தூக்கத்தை தரும் . அதுபோல மன அழுத்தங்களையும் பெருமளவில் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

உடல் எடை குறையும்: உடல் எடை அதிகம் கொண்டவர்கள் சாப்பிட்டு வருவது நல்லது . உடல் எடையை குறைப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் பசி உணர்வைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இயற்கை முறையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். ஆதலால், செர்ரி பழம் சாப்பிடுபவர்களின் உடல் ரத்த ஓட்டத்தை சீராக்கும் . இதனால் இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் கிடைக்கிறது. ஆதலால், செர்ரி பழம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மை தரும் என்று கூறப்படுகிறது.