மண்ணுக்குள் புதைந்த பாண்டிய நாடு… முதல் முதலில் கிடைத்த குழந்தையின் எலும்புக்கூடு….

0
Follow on Google News

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் முதன்முதலில் குழந்தையின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் ஆய்வுகள் நடைபெற்று வந்தது. இதில் பூமிக்கு அடியில் ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளது. இதுவரை தாயக் கட்டைகள், மீன் சின்னம் பொறித்த பானை ஓடுகள், கட்டிட எச்சங்கள், பாசி, பவளம், பொம்மைகள், தாக்களி, இரும்பு, தங்கம், உறைக்கிணறு போன்ற பல பொருட்கள் கிடைத்தது.

மேலும் கருப்பு நிற பானை ஓடுகளும் கிடைத்துள்ளது. சில பானைகளில் மீன் சின்னங்கள் பொறுத்துள்ளது மீன் சின்னம் பாண்டியர்களின் கொடி என்பதால் பாண்டியர்கள் இங்குதான் ஆட்சி செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் ஆய்வில் கிடைத்த எழுத்துக்களும் கீழடி அகழாய்வில் கிடைத்த பானைகளின் மீது எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களும் ஒரே மாதிரியாக உள்ளது.

தமிழி எழுத்துக்களும் கிடைத்துள்ளது. இந்த ஆய்வுகளில் கிடைத்த பொருட்களை வைத்து இதன் காலத் தன்மையை கணிக்கும்போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய காலகட்டத்தை சேர்ந்தவை என்று ஆய்வில் கூறப்பட்டது. ஐந்து மற்றும் ஆறாம் கட்ட அகழாய்வுகளில் அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதிலும் பல வியக்க வைக்க பொருட்கள் கிடைத்துள்ளது.

இந்த அகழாய்வு பணியின் தொடர்ச்சியாக ஏழாம் கட்ட அகழாய்வு கொரோனா ஊரடங்கு க்குப் பிறகு தொடங்கப்பட்டது. அகரம், கொந்தகை, மணலூர் போன்ற இடங்களில் நடைபெற்று வந்தது. மணலூரில் ஆய்வாளர்கள் மூன்று குழிகள் தோண்டி உள்ளனர். இதுவரை தோண்டப்பட்டு வந்த நிலையில் இரண்டாவது குழியில் 3 அடி ஆழத்தில் தோண்டி கொண்டிருக்கும் போது ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது. இதை முழுமையாக வெளியே எடுக்க வேலை நடந்து வருகிறது. எனவே மணலூர் அந்த கால மக்களின் மயான காடாக இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதுவரை மனித எலும்புக் கூடுகளும் கிடைத்தது முதுமக்கள் தாழிகளும் கிடைத்துள்ளது.ஆனால் குழந்தையின் எலும்புக்கூடு கிடைத்தது இதுவே முதல் முறை. இந்த ஆராய்ச்சிக்கு முன்புவரை மணலூர் பண்டைய மக்களின் தொழில் நகரமாக இருக்கக்கூடும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த ஆராய்ச்சியில் கிடைத்த மனித எலும்புக்கூடுகள், முதுமக்கள் தாழி மற்றும் தற்போது கிடைத்துள்ள குழந்தையின் எலும்புக்கூடுகள் வயிற்றுப் பார்க்கும்போது மணலூர் இறந்தவர்களை அடக்கம் செய்யும் ஒரு சுடுகாடாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.