திருடி கையும் களவுமாக சிக்கிய கமல்ஹாசன்.! பணம் கொடுத்து சரி செய்ய முயற்சித்ததை போட்டு உடைத்த பாதிக்கப்பட்ட பிரபலம் ..

0
Follow on Google News

பிரபல இயக்குனர் கலைஞானம், இவர் பட தயாரிப்பு, கதை எழுத்தாளர் என சினிமா துறையில் பணியாற்றி வந்தவர். நடிங்க ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பைரவி திரைப்படத்தின் கதை வசனம் எழுதி மற்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர் இவர். இன்னும் பல படங்களை இயக்கியுள்ளார், இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த பல படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் கலைஞானம், தமிழக அரசு இவர்க்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இவர் 1990 கால கட்டத்தில் தனது இயக்கத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்க முயற்சி செய்தவர் அவருக்கான கதையை தயார் செய்துள்ளார். இதை நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தான் தயார் செய்த கதையை விளக்கி கூறியுள்ளார், அப்போது கமல்ஹாசன் கதை கேட்டுக்கொண்டிருக்கையில் உடன் இசை அமைப்பாளர் கங்கை அமரன் இருந்துள்ளார், இந்த படத்துக்கு அதிவீர பாண்டியன் என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கதையை கேட்டுவிட்டு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் கடந்து சென்றுள்ளார் கமல்ஹாசன், ஆனால் அடுத்த சில மாதங்களில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் திரைப்படத்தை திரையில் பார்த்த கலைஞானம் பெரும் ஷாக் ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசனிடம் சொன்ன அதிவீர பாண்டியன் கதையை தேவர்மகன் என பெயர் மாற்றி கமல்ஹாசன் திருட்டுத்தனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது, இதனை தொடர்ந்து கடும் அப்செட்டில் இருந்து வந்துள்ளார் கலைஞானம்.

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்திக்க முடிவு செய்தார் கலைஞானம் ஆனால் கமல்ஹாசன் பெங்களுரில் சினிமா படப்பிடிப்பில் பிசியாக இருந்துள்ளார், இதனை தொடர்ந்து கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நீங்க என்னுடைய கதையை திருடி இருக்கீங்க என தெரிவித்ததை தொடர்ந்து, அதை ஒப்பு கொண்ட கமல்ஹாசன் நாளை தனது மேலாளரை உங்களை சந்திக்க அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த நாள் கமலஹாசன் அணுப்பிய அவரது மேலாளர் கலைஞானத்தை சந்தித்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கொடுத்துள்ளார், இதை வாங்க மருத்த கலைஞானம் சட்டப்படி எனக்கு சுமார் 40 லட்சம் வரை கமல்ஹாசன் தரவேண்டும், பரவாயில்லை இதை அவரிடமே திருப்பி கொடுங்க என திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் பலமுறை முயற்சித்தும் அவர் தனது கதைக்கான பணத்தை கமல்ஹாசன் இடம் இருந்து இன்று வரை பெற முடியவில்லை.