திமுக அரசு வார்த்தை ஜாலங்களை வைத்து நெருப்புடன் விளையாடக்கூடாது..! அண்ணாமலை IPS எச்சரிக்கை..

0
Follow on Google News

ஒன்றிய அரசு சர்ச்சை குறித்து பாஜக துணை தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் புதிய திமுக அரசால் உற்சாகமாக பரப்பப்படுகிறது. இத்தருணத்தில் இந்தியாவும், அது உள்ளடக்கிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பரிணாமவளர்ச்சியை நாம் திரும்பி பார்க்க வேண்டும். இன்றய இந்தியா 29 மாநிலங்களையும், 7 யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த அமைப்பு, வரையறை சிலமுறை மாற்றப்பட்டு வளர்ந்து இன்று நாம் காணும் நிலையில் உள்ளது. பலதருணங்களில் மாநிலங்களின் எல்லைகள் திருத்தி அமைக்கப்பட்டன. மொழி, சமத்துவம் மற்றும் நிர்வாக வசதிக்காக பல புதிய மாநிலங்கள் கடந்த 74 ஆண்டுகளில் அமைக்கப்பட்டன. இது “மாறா இந்தியா மாறும் மாநிலங்கள் என்ற அடிப்படையில் வந்தது. யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா என்பது பல மாகாணங்களை 1176 முதல் ஒன்று ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டது.

1707ல் பிலடெல்பியா மாநாடு, தேசியவாதிகள், பெரும்பாலும் முன்னாள் இராணுவ வீரர்களின்
கூட்டமாக நடந்தது. ஒவ்வொரு மாகாணமும் தமக்கான சக்திவாய்ந்த அரசியல் அமைப்பு சட்டத்தை அமைத்து வழி நடந்தது. டிசம்பர் 15, 197 முதல் ஒவ்வொரு அமெரிக்க மாகாணமும் அமெரிக்க கூட்டமைப்பு’ என்ற வரையறைக்குள் வருவதற்கு தமது சட்டங்களை மாற்றி அமைத்தன. இது மார்ச் 1, 1981 வரை நடந்தது. இதற்கு பிறகே இன்று நாம் காணும் அமெரிக்கா உயிர் பெற்றது.

இந்தியாவில் நடந்தது வேறு. 1946ல் சுதந்திர இந்தியாவிற்கான தற்காலிக பாராளுமன்றம் இந்திய அரசியல்
அமைப்பு சட்டம் உருவாக்க அமைக்கப்பட்டது. இதன் படி ஆகஸ்ட் 15, 1947ல் இந்தியா, அன்று இருந்த அனைத்து மாகாணங்களை உள்ளடக்கிய ஒரு நாடக பரிணமித்தது. விடுதலைக்கு பின் வந்த 3 ஆண்டுகளில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஒரு முழு வடிவம் பெற்றது இந்த காலகட்டத்திலேயே நாம் ஒரு நாடாக, நமது நாட்டின் இறையாண்மையை காக்க பாகிஸ்தானுடன் யுத்தம் செய்தொம்.

ஒரு நாடாக, அன்று இருந்த பிரிவினைவாதங்களையும் ஒழித்தோம். இந்த மூன்று ஆண்டுகளின் முடிவில் இந்தியா ஒரு சுதந்திர நாடாக பரிணமித்து மிளிர்ந்தது. இந்தியா விடுதலை அடைந்த தருணத்தில், அன்று இருந்த அனைத்து மாகாணங்களுக்கும் பாரதம் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஷரத்து 1 நிறுவியது. 1955ல் வந்த மாநிலங்களின் மறு வரைவு கொள்கைபடி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டது.

அன்றைய மெட்ராஸ் மாகாணம் மொழிவாரி மாநிலங்களாக ஏற்படுத்தப்பட்ட ஆந்திர மற்றும் கர்நாடகா போன்ற புதிய மாநிலங்களுக்கு தன் நிலப்பரப்பை பிரித்து கொடுத்து சுருங்கியது. 1957ல் மதராஸ்” என்றிருந்த மாநில அரசு தனது பெயரை தமிழ்நாடு என்று மாற்றிக்கொண்டது. அதுவே தமிழ்நாட்டின் தொடக்கம். 1996ல் தமிழ்நாட்டின் தலைநகரமாக இருந்த மெட்ராஸ், சென்னை என்று பெயர் மாற்றம்
செய்யப்பட்டது.

சென்னை என்ற பெயர் ஆந்திர ஆட்சியாளர் சென்னப்பா அவர்களின் நினைவாக வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 15, 1947ல் இருந்த மாகாணங்களை பார்க்கும் போது இன்று இருக்கும் தமிழ்நாடு மிகவும் வேறுபட்டது என்பது
புரியும். இந்தியா என்ற ஒரு மாறாத அரசியல் அமைப்பில் உருவாக்கப்பட்ட மாநிலங்கள் தமக்கான சில
சட்டங்களையும் மற்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துடன் ஒத்தும் இருக்கும் சில சட்டங்களையும், தமது வசதிக்காக வடிவமைத்து கொண்டன.

மாநிலங்களின் புது வரலாற்றை எழுதும் வேலையே திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு அரசியல் கட்சி தனது மாநிலத்திற்காக பேசுவது இயல்பே. ஆனால் அதை ஒரு உண்மைக்கு புறம்பான வடிவத்தில் செய்ய கூடாது. தமிழர்கள் தனித்துவமானவர்கள். தமிழ் உலகிலேயே பழமையான மொழி, இதை பிரதர் மோடி அவர்களும் பலமுறை குறிப்பிட்டுள்ளார். தமிழ் நாட்டில் அமைந்துள்ள புதிய திமுக அரசு வார்த்தை ஜாலங்களை வைத்து நெருப்புடன் விளையாடக்கூடாது.

2006 முதல் வரை ஆட்சி செய்த போதும், | முதல் 2014 ரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம்வகித்து, பல துறைகளின் அமைச்சர் பொறுப்புகளில் இருந்தபோதும் மத்திய அரசு’ என்று அழைத்துவிட்டு இன்று, திமுக புதிதாக ஒன்றியம்’ என்று அழைப்பதற்கு காரணம் என்ன? வளர்ச்சிக்கான எந்த ஒரு சிந்தனையும் இல்லாத போக்கு, கொரோணா 2ம் அலை பெரும் உயிர் இழப்பை தடுக்க முடியாமல் தோல்வி, மக்களுக்கு தடுப்பூசி கொண்டு போய் சேர்க்க முடியாத நிலைமை, இவற்றை எல்லாம் மறைப்பதற்குத்தான் இது போன்ற சர்ச்சைகளை திமுக உருவாக்குகிறதா? திமுகவின் இந்த நாடகங்கள் ஏன் என்பதற்கான விடையை உங்களிடமே, உங்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்!