லிட்டருக்கு 3ரூபாய் இன்று முதல் அமலாகும் ஆவின் பால் விலையை குறைப்பு…

0
Follow on Google News

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை பெரும்பான்மையுடன் வெற்றி கொண்டு ஆட்சியை பிடித்தது திமுக. மே 7 அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அன்று முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நேரத்தில் முதல்வரான மு.க.ஸ்டாலின் முதலில் போடக்கூடிய கையெழுத்து எது என்று தமிழக மக்களால் உற்று நோக்கப்பட்டது. முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் நேராக தலைமை செயலகம் சென்றார். அங்கு அவருக்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் அறிவித்த முக்கிய ஐந்து திட்டங்களில் கையெழுத்திட்டு முடிவு செய்தார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய்.4000ல் முதல் தவணையாக 2000ரூபாய் வழங்குதல், மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்பவர்களுக்கு கட்டணத்தை தமிழக அரசு காப்பீடு திட்டத்தின் மூலம் செலுத்தும், தமிழக மக்களின் பிரச்சினை 100 நாட்களுக்குள் சரி செய்ய உங்கள் தொகுதியில் முதல்வர் என்று புதிய துறை,  ஆவின் பால் விலை லிட்டருக்கு 3ரூபாய் குறைப்பு போன்ற ஐந்து முக்கியகிய கோப்புகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு தமிழக மக்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கினார். 

கையெழுத்திட்ட  முக்கிய ஐந்து கோப்புகளில் முக்கியமாக பார்க்கப்பட்டது ஆவின் பால் விலை குறைப்பு தான். தமிழக மக்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டு இருந்த ஆவின் பால் விலை லிட்டருக்கு 3.ரூபாய்குறைப்பு இன்று அமலுக்கு வருகிறது.