ஊரடங்கை மீறுபவர்களை போலீசார் தாக்குவது போன்ற காட்சிகள் உண்மையா?வீடியோ உள்ளே..

0
Follow on Google News

ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களின் வாகனங்களை காவல்துறை அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வளம் வருகிறது. கொரோனா 2வது அலை தமிழகத்தில் மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

கொரோனா 2வது அலையில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்று பரவலை தடுக்க மே 10 முதல் 24தேதி வரை ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்தார். இதான் மூலம் கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைத்து விட முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில டீ கடைகள், மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சி கடைகளுக்கு காலை முதல் மதியம் 12மணி வரை இயங்கி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அத்தியவசிய தேவைகளுக்கு வழங்கப்பட்ட தளர்வுகளை சிலர் பயன்படுத்தி கொண்டு வெளியில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித் வந்தனர். 

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்த போது ஊரடங்கு நேரத்தில் தேவைகள் இன்றி  வெளியில் சுற்றி வந்தவர்களின் வாகனங்களை காவல்துறை சிறைப்பிடித்து ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை புதிதாக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிபவர்களை காவல் துறை தொந்தரவு செய்ய கூடாது அதற்கு பதில் விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதை சாதகமாக எடுத்துக்கொண்டு பலர் வெளியே சுற்றி வந்தனர். இதனால் கொரோனா வைரஸால் பாதிப்பு அதிகரித்தது உயிர் பலிகளும் அதிகரித்தது. இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலேசணை கூட்டம் நடைபெற்றது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதால் நேற்று முதல்  ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சி கடைகள் இன்று முதல் காலை 6மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. டீ கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டது. 

மாநிலம் விட்டு மாநிலம், மாவட்ட விட்டு மாவட்டம் மற்றும் மாவட்டத்திற்குள்ளே வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்றாலும் இ-பாஸ் அவசியம் என்று அறிவிக்கப்பட்டது. கடைகளுக்கு செல்லுபவர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் அருகிலுள்ள கடைகளுக்கு தான் செல்லவேண்டும், கடைகளுக்கு செல்வதாக கூறி விட்டு வேறு இடத்திற்கு செல்லக்கூடாது. காலை 10மணிக்கு மேல் யாரும் வெளியே வர கூடாது வந்தால் 500ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று வெளியிடப்பட்டது. இனி வெளியே அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றினால் காவல் துறை சும்மா விடாது என்று எதிர்பார்க்கப்பட்டது. 

வெளியே தேவைகள் இன்றி வாகனங்களில் சுற்றி வந்தவர்களை போக்குவரத்து காவல் துறையை சேர்ந்த ஒருவர் பிடித்து விசாரித்து அவர்களின் வாகனங்களின் ஹெட்லைட், பேக்லைட்டை கையில்  வைத்திருக்கும் லத்தியால் உடைக்கிறார்கள் என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. இதில் முக்கிய தேவைகளுக்காக வெளியில் வருபவர்களை மற்றும் சும்மா சுற்றி திரிபவர்களை தாக்குவது போன்ற காட்சிகள் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையில் போட்ட ஊரடங்கில் நடைபெற்ற சம்பவம் என கூறப்படுகிறது. இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.