திமுக வேட்பாளர் PTR தியாகராஜன் மீது அதிருப்தியில் மதுரை மத்திய தொகுதி மக்கள்.! ஆனால் அவர் வெற்றியை தடுக்க முடியாது.! என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

மதுரை மத்திய தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றவர் PTR பழனிவேல் ராஜன், இவர் இளம் வயதிலே பட்ட படிப்பு படிக்க அமெரிக்க சென்றவர், அங்கேயே தனது பணியை தொடங்கினர், வெள்ளைக்கார பெண்ணை திருமணம் செய்த PTR தொடர்ந்து வெளிநாடுகளில் மேற்கத்திய கலாச்சார வாழ்கை பிடித்து போக அங்கேயே குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். திமுக முன்னால் சபாநாயகர் PTR பழனிவேல் ராஜனின் ஒரே மகன் PTR பழனிவேல் தியாகராஜன்.

மதுரை மாவட்டத்தில் அனைத்து கட்சியினரால் பண்பாளர் என போற்றப்படக்கூடியவர் PTR பழனிவேல் ராஜன், இவர் முக அழகிரி அரசியலுக்கு இடையூறாக இருந்ததால் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தாலும் 2001 சட்டசபை தேர்தலில் முக அழகிரி ஆதரவாளர்கள் இவரை தோல்வி அடைய செய்த்தனர், அதன் பின்பு அரசியலில் இருந்து விலகி இருந்தவர் திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் கட்டாயத்தினால், 2006 தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இந்து அறநிலை துறை அமைச்சராக பதவி ஏற்று சென்னையில் இருந்து மதுரை வரும் வேலையில் திருச்சி அருகே மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

இதன் பின்பு நடந்த மதுரை மத்திய தொகுதி இடைதேர்தலில் PTR பழனிவேல் ராஜன் மகன் PTR.ப. தியாகராஜன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தந்தையின் இறுதி காரியத்தை முடித்துவிட்டு அமெரிக்க பறந்தார் PTR தியாகராஜன், இதன் பின்பு ஸ்டாலின் மருமகன் சபரீசன் வற்புறுத்தலால் மதுரை மத்திய தொகுதியில் 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் PTR தியாகராஜன்.

கடந்த 5 வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் PTR தியாகராஜன் அந்த தொகுதியில் தொடர்ந்து, அதிமுக, பாஜக அரசுக்கு எதிராக எதிர்மறை அரசியல் செய்து வரும் இவர், தொகுதி மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக என்ன செய்தார் என்பது பெரும் கேள்வி குறியாக இருக்கிறது, மதுரையில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி கட்டுமான பணிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த திட்டத்தை குறை கூறி தொடர்ந்து மத்திய, மாநில அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தி வருகின்றவர் PTR தியாகராஜன்.

இந்நிலையில் தொகுதி மக்கள் இவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தாலும், இந்த தொகுதியில் பெருமளவில் முஸ்லீம் வாக்காளர்கள் உள்ளனர், இவர்கள் வாக்குங்கள் முழுமையாக உதயசூரியன் சின்னத்தில் விழும் என்பதால், PTR தியாகராஜன் மீது தொகுதி மக்கள் அதிருப்தியில் இருந்தாலும் மீண்டும் மதுரை மத்திய தொகுதியில் அவர் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.