ரதச் சத்து மற்றும் நார்ச் சத்து அதிகம் நிறைந்த மஸ்ரூம் பொடிமாஸ் செய்வது எப்படி.?

0
Follow on Google News

அனைவருக்கும் வணக்கம், இன்று நம் ஆரோக்கிய சமையலில் நாம் பார்க்கப் போவது புரதச் சத்து மற்றும் நார்ச் சத்து அதிகம் நிறைந்த, ரத்தசோகையை போக்க உதவும் மஷ்ரூம்-ஐ வைத்து ஐந்து நிமிடத்தில் மஸ்ரூம் பொடிமாஸ் எப்படி சமைப்பது என்பதைப் பற்றி தான்.

தேவையான பொருட்கள்:-
★மஸ்ரூம்
★ஜீரகம்
★மிளகுத்தூள்
★சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
★கடுகு
★உளுந்து
★கறிவேப்பிலை
★எண்ணெய்
★உப்பு – தேவையான அளவு

செய்முறை:- கடாயில் எண்ணெய் ஊற்றி; கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சின்ன வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். அதன்பின் மஷ்ரூம்-ஐ போட்டு நன்றாக கிளறி விடவும். மஸ்ரூம்-இன் மீது சிறிதளவு தண்ணீர் தெளித்து 5 நிமிடங்கள் அதனை வேக விட்டால் மஸ்ரூம் வெந்துவிடும்.
அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக அனைத்தையும் கிளறி இறக்கவும். பல சத்துக்கள் உடைய மஸ்ரூம் பொடிமாஸ் ரெடி ஆகிவிட்டது. இந்த சத்துள்ள ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்த்து பயன்பெறவும்.

நன்றி, திருமதி க.சுகன்யாதேவி முத்துராமன்இந்த ரெசிபியை வீடியோவில் காண கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்