வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் புதினா சாதத்தை செய்வது எப்படி.?

0
Follow on Google News

அனைவருக்கும் வணக்கம், இன்று நம் ஆரோக்கிய சமையலில் நாம் பார்க்கப்போவது, வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் புதினா சாதத்தை செய்வது எப்படி என்பதை பற்றி தான்.

தேவையான பொருட்கள்:-
★புதினா – ஒரு கட்டு
★இஞ்சி – சிறிதளவு
★புளி – சிறு நெல்லிக்காய் அளவு
★பச்சை மிளகாய் – 2
★நெய் – 2 தேக்கரண்டி
★வேர்கடலை, முந்திரி பருப்பு – 2 தேக்கரண்டி
★மிளகாய் வத்தல்-1

செய்முறை:- சுத்தம் செய்து வைத்திருந்த புதினாக் கீரையை எடுத்து, அதனுடன் புளி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில், நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, முந்திரி பருப்பு, வேர் கடலை மற்றும் மிளகாய் வத்தலும் சேர்த்து வறுத்து, அதனுடன் அரைத்து வைத்த புதினா கலவையையும் சேர்த்து கொதிக்கவைத்து, கலவை கெட்டியாகியவுடன் சாதத்தைச் சேர்த்து கிளறி இறக்கினால் புதினா சாதம் தயார்.

இந்த ஆரோக்கியமான புதினா சாதத்தை உங்கள் வீட்டில் செய்து பார்த்து பயன்பெறுங்கள்.
நன்றி ~திருமதி க.சுகன்யாதேவி முத்துராமன்
இந்த ரெசிபியை வீடியோவில் காண கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்