குழந்தைகளுக்குப் பிடித்த பீட்ரூட் ஜாம் செய்வது எப்படி? பார்க்கலாம் வாங்க!!

0
Follow on Google News

அனைவருக்கும் வணக்கம், இன்று நம் ஆரோக்கிய சமையலில் நாம் பீட்ரூட் ஜாம் எப்படி செய்வது என்பதைப் பற்றி தான் பார்க்கப் போறோம். ரத்த விருத்தியை அதிகரிக்கும் பீட்ரூட்டை வைத்து குழந்தைகளுக்குப் பிடித்த ஜாம் செய்வது எப்படி? என்று பார்க்கலாம் வாங்க!!

தேவையான பொருட்கள்:-
★பீட்ரூட்-ஒன்று
★சீனி-கால் கப்

செய்முறை:- இப்போது செய்முறைக்கு போகலாம். பீட்ரூட்டின் தோலை சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அதை குக்கரில் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு விசில் விட்டால் போதுமானது. ஆறிய வேகவைத்த பீட்ரூட்டை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் பீட்ரூட் கலவையைக் கொட்டி 5 நிமிடங்கள் கிளறி விட வேண்டும். அதன் பிறகு சீனியை சேர்த்து, அந்த கலவையை கெட்டியாகும் வரை கிண்டவும்.

இப்பொழுது அனைவருக்கும் பிடித்த பீட்ரூட் ஜாம் ரெடி ஆகிவிட்டது. இந்த பீட்ரூட் ஜாம்-மை 3 நாட்கள் வரை நாம் பயன்படுத்தலாம். எந்த ஒரு வேதிப்பொருட்களும் கலக்காமல் வெறும் இரண்டு பொருட்களை வைத்து, உடம்புக்கு ஆரோக்கியமான ஒரு ஜாம்-மை நாம் வீட்டிலேயே செய்யலாம். எனவே நீங்கள் அனைவரும் உங்கள் வீட்டில் இந்த சமையலை செய்து பார்த்து பயன் பெறுங்கள்.
நன்றி ~சுகன்யாதேவி முத்துராமன், இந்த செய்முறையை வீடியோவில் காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்