நலிவுற்று இருப்பவர்கள், முதுகு வலி மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படுபவர்களுக்கு ஏற்ற உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி.?

0
Follow on Google News

வணக்கம் நண்பர்களே, இன்று நம் ஆரோக்கிய சமையல் பகுதியில் நாம் பார்க்கப்போவது கருப்பு முழு உளுந்து உளுந்தங்கஞ்சி. இது நலிவுற்று இருப்பவர்கள், முதுகு வலி மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படும் அனைவருக்கும் இந்த உளுந்தங்கஞ்சி வீட்டிலேயே செய்து கொடுங்கள். காலை வெறும் வயிற்றில் இதை அருந்தலாம்.

பொருட்கள் தேவை:-
★கருப்பு முழு உளுந்து-250 கிராம்
★வெல்லம்-200 கிராம்
★ஏலக்காய் 25கிராம்
★தேங்காய் பூ

செய்முறை:- தேவையான அளவு கருப்பு முழு உளுந்து எடுத்து வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு வெல்லப் பாகு செய்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். கருப்பு உளுந்து, முழு உளுந்தையும், ஏலக்காயையும் கலந்து வறுத்து பொடி செய்துக் கொள்ளவும். அதை கஞ்சி காய்ச்சுவது போல் சுடு தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் அந்த பொடியை போட்டு நன்றாக கரைந்ததும், கொதி வந்தவுடன் வெல்லப்பாகை சேர்த்து தேங்காய் கலக்கவும்.

காலை வெறும் வயிற்றில் அனைத்து வயதினரும் இதை அருந்தலாம். இது மிகவும் ஆரோக்கியமான சமையல். நீங்களும் இதை வீட்டில் செய்து பார்த்து, உஙகளின் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கவும். ~திருமதி சுகன்யாதேவி முத்துராமன்