வளர்ப்பு மகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம்.! முதியவருக்கு 24 பிரம்படி வழங்கிய நீதிமன்றம்.! எங்கே நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

மலேசியாவில் வளர்ப்பு மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதியவருக்கு 24 பிரம்படியும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, குற்றவாளிக்கு ஆதரவாக யாரும் வராத நிலையில் அரசு தரப்பு அவருக்கு எதிராக வாதிட்டது, அரசு தரப்பு வழக்கறிஞர் தன் வாதத்தில் குறிப்பிட்டதாவது, “வளர்ப்புத்தந்தை என்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்ட சிறுமியைப் பொறுப்புடன் பாதுகாத்திருக்க வேண்டும்.

மாறாக, அச்சிறுமியின் சுயமதிப்பை இவரே அழித்துள்ளார். இத்தகைய செயல்பாடு பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்நாள் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் இத்தகைய முறையற்ற உடலுறவு மற்றும் பலாத்காரங்கள் திகிலூட்டுபவை என்றும் கண்டிக்கத்தக்கவை என்றும், மதங்களுக்கு அப்பாற்பட்டு இத்தகைய செயல்பாடு சமுதாயத்தின் அனைத்து மட்டத்திலும் தீவிரமான செயலாகவே பார்க்கப்படுகிறது” வாதங்கள் முடிவடைந்த நிலையில் பெண் நீதிபதி தன் தீர்ப்பை வாசித்தார்,

அதில் அவர் சொன்ன வாக்கியங்கள் மிக சமூக பொறுப்பும் அர்த்தமும் வாய்ந்தவை “இத்தகைய வன்முறைச் செயலில் நீங்கள் ஈடுபட்டிருக்கக்கூடாது. குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இது குறைவான தண்டனைதான். சிறையில் இருக்கும்போது நீங்கள் மனம் திருந்துவீர்கள் என நம்புகிறேன் சிறையில் மனம் திருந்துங்கள். நீங்கள் புரிந்திருப்பது அருவருப்பான செயல்” ஆம் அது அருவருக்கதக்க அருவருப்பான செயல் என்பதில் சந்தேகமே இல்லை என தீர்ப்பில் கூறப்பட்டது.

உலகெங்கும் மதிகெட்ட புத்திகெட்ட முதியவர் சிலர் தன் தரம் தாழ்ந்து செய்யும் காரியத்துக்கு இப்படி மிக கடுமையான தண்டனைகள் உண்டு. இதே போன்ற கடுமையான தண்டனைகள் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் அமுலுக்கு வந்தால் தான் பாலியல் வண்கொடுமைகளில் இருந்து பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று சமூக அக்கறை கொண்ட அனைவரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .