நீங்கள் நெடுஞ்சாலையில் பயணிப்பவரா.? நூதன முறையில் நடக்கும் கொள்ளை சம்பவம் ..மக்களே உஷார்..!

0
Follow on Google News

நெடுசாலையில் இரவு நேரத்தில் பயணிக்கும் போது மிக கவனமாக இருங்கள், சமீபத்தில் உளுந்தூர்பேட்டை அருகில் நூதன முறையில் கொள்ளை அடிக்க முயன்றவர்களிடம் சிக்காமல் தம்பித்தவர் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஆகையால் இரவு நேரத்தில் நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் உசாராக இருக்க வேண்டும், சமீபத்தில் கொள்ளையர்களிடம் தம்பியவரின் உறவினர் கொள்ளை சம்பவம் குறித்து கூறுகையில்,

உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நெடுசாலையில் பயணிப்பவர்களுக்கு இது வந்து ரொம்ப முக்கியமான தகவல், இந்த தகவல் அனைவர்க்கும் பயனாக இருக்கும், நேற்று என் மாமா ஒரு புது வாகனத்தை எடுத்து கொண்டு, தனி ஆளாக விக்கிரவாண்டி சுங்கை சாவடி வழியாக உளுந்தூர்பேட்டை நெடுசாலையில் பயணித்துள்ளார், சுங்கை சாவடியை கடக்கும் போது அங்கே இருந்து தகவல் சென்றுள்ளது, வாகனத்தில் தனியாக ஒருவர் பயணிப்பதாக.

இந்நிலையில் உளுந்தூர்பேட்டை போகிற வழியில், இரண்டு நபர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் எனது மாமா வாகனத்தை சேத படுத்தியுள்ளனர், ஆனால் எனது மாமா வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து சென்றுள்ளார், ஆனால் அவர்கள் வாகனம் மீது மோதியும் உள்ளனர், ஆனால் எனது மாமா வாகனத்தை நிறுத்தவே இல்லை. சற்று தூரம் சென்றதும் அருகில் இருந்த டீ கடையில் வாகனத்தை நிறுத்தி எனது மாமா அந்த டீக்கடையில் விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது.

இரண்டு சக்கர வாகனத்தில் வரும் இவர்கள் தனியாக வாகனத்தில் வருகின்றவர்கள் வாகனத்தை இரும்பு கம்பியால் ஸ்க்ராட்ச் செய்வதாகவும், பின் அந்த வாகனத்தை நிறுத்தி இறங்கியதும் ஓட்டுனரை தாக்கிவிட்டு வாகனத்தை திருடுவது, அல்லது வாகனத்தில் இருப்பவர்களின் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிடுவார்கள் என அந்த டீக்கடை காரர் கூறியுள்ளார், இந்த சம்பவம் பல மாதங்களாக நடந்து வருகிறதாம்.

இதே போன்று திருச்சி அருகே சில மாதங்களுக்கு முன் நடந்ததாக கூறப்படுகிறது, ஆகையால் நெடுசாலையில் இரவு நேரத்தில் பயணிக்கும் நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் உங்கள் வாகனத்தை சேதப்படுத்தினால் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் சமூக அக்கறை கொண்டவர்கள், மேலும் கொள்ளையில் ஈடுபடுகின்றவர்கள் பெரும்பாலும் உள்ளூர் வாசிகள் போல் தோற்றம் அளிப்பதாக கூறப்படுகிறது.

நீங்கள் நெடுஞ்சாலையில் பயணிப்பவரா.? நூதன முறையில் நடக்கும் கொள்ளை சம்பவம் ..மக்களே உஷார்..!