எம்ஜிஆர் இல்லை என்றால் பிரபாகரனே கிடையாதுடா.! சீமானுக்கு தக்க பதிலடி கொடுத்த ராதாரவி.!

0
Follow on Google News

காரைக்குடியில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, சமீபத்தில் எம்ஜிஆர் அவர்களை பற்றி சீமான் பேசியதற்கு தக்க பதிலடி கொடுத்தார், அவர் பேசுகையில், ஒரு தொகுதிக்கு சீமான் தம்பி ஒரு 1500 ஓட்டு வச்சிருக்கு, சீமான் சொல்கிறார் கர்நாடகாவிலிருந்து காவிரி தண்ணீர் வரக் கூடாது, ஆனால் கர்நாடகாவில் இருந்து தலைவர் வரலாமா என கேட்கிறார்.

நான் உன்ன கேட்கிறேன் அவர் ரஜினிகாந்த் அவர்கள் இன்னும் அரசியல் கட்சியை தொடங்கவில்லை, அவர் கட்சி தொடங்குவாரா.? மாட்டாரா.? என்று அனைவரும் குழப்பத்தில் உள்ளார்கள் சீமான் முதற்கொண்டு, ஆனால் அவர் கட்சி தொடங்குவேன் என்று சொன்னதுக்கே சும்மா அதுருத்துல, அதாண்டா அவர். நான் சீமானிடம் கேட்கிறேன் பிஜேபியில் ஒரு தமிழன் முதலமைச்சராக வேட்பாளராக நின்றால் நீ ஏற்றுக் கொள்வாயா.?

உன் கட்சியில் நின்றால்தான் தமிழனா.?வேறு வேறு கட்சியில் உள்ளவர்கள் எல்லாம் வந்தேறிய, திராவிட கழகத்தில் இருக்கும்போது தந்தை பெரியார் போல் ஒரு ஆள் இல்லை என்று சொன்னார் சீமான், பிறகு அவரை வந்தேறி என்று சொன்னான், என் அப்பாவையும் வந்தேறி என்று சொன்னார், அவர் வந்தேறி தான் அது வேற ஒரு கதை, சீமான் இப்போது புரட்சித் தலைவரை மெதுவாக தொட்டு பார்க்கிறார், பெரிய ஆளாகி விடலாம் என்று சீமான் எம்ஜிஆரை இழிவாக பேசிய வருகிறான்.

நான் அதிமுக முக்கிய தலைவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னங்க இப்படி பேசுகிறானே, என்று கேட்டதற்கு விடுங்க அவனை தொட்டால் பெரிய ஆளாகி விடுவான் என்று சொன்னார்கள், இன்று எம்ஜிஆரை மலையாளி என்று சொல்கிறார் சீமான், நீ மேடைக்கு மேடை பிரபாகரன் என்று பேசுகிறாயே, இந்த எம்ஜிஆர் இல்லை என்றால் பிரபாகரனே கிடையாதுடா, இந்த மேடையிலே சவால் விடுகிறேன் கேட்டுப் பாருடா பிரபாகரனிடம் அவரை காப்பாற்றியது தமிழ்நாட்டில் இடம் கொடுத்தது அனைத்தும் எம்ஜிஆர் தான்டா.

ஆனால் நீ நன்றி கெட்ட தனமாக எம்ஜிஆரை இழிவாக பேசலாமா? நீ இங்கே இருந்துகிட்டு வியாபாரம் பண்ணாதே, தமிழ்நாட்டில் பிறந்தவர்களை வியாபாரம் செய்யாதே, நான் வந்தால் ஒரே நாளில் மாற்றி விடுவேன் என்று சொல்கிறியே, யாரை மாற்ற போகிறாய், நீதான் மாற்றுவேன் என்று விஜயலட்சுமி உன்னை பற்றி ஓன்று சொல்லுச்சே, என சீமான் எம்ஜிஆர் குறித்து இழிவாக பேசியதற்கு நடிகர் ராதாரவி தக்க பதிலடி கொடுத்தார்.

என்னை மன்னிசிடுங்க ! விஜயகாந்தை நேரில் சந்தித்து கதறி அழுத வடிவேலு.! பிரேமலதா என்ன சொன்னார் தெரியுமா.?