அப்பா எங்களுக்கு நீங்க வேண்டும்ப்பா.! அரசியல் வேண்டாம்..கதறி அழுத்த ரஜினிகாந்த் மகள்கள்.!

0

2017 டிசம்பரில் வெளியான ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு 2020 டிசம்பரில் முடிவு பெற்றுள்ளது, இது கடந்த மூன்று வருடங்களில் நடந்த பரபரப்புக்கு வைக்கப்பட்ட முற்று புள்ளி இல்லை, சுமார் 25 வருடங்களாக 1996ஆம் ஆண்டு முதல், நான் எப்ப வருவேன், எப்படி வருவேன் என யாருக்கும் தெரியாது ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன், ஆண்டவன் கட்டளையிட்டால் உடனே அரசியலுக்கு வருவேன் என சினிமாவில் தொடர்ந்து அரசியல் வசனம் பேசி 25 வருடங்களாக தமிழக மக்களை குழப்பத்தில் வைத்திருந்த ரஜினிகாந்த் தற்போது தனது முடிவை அறிவித்திருக்கிறார்.

என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள் என உருக்கமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிக்கையில் மூலம் அரசியலுக்கு வரவில்லை என தெரிவித்திருந்தார்.

ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருக்க காரணம் அவருடைய இரண்டு மகள்கள் தான் என கூறப்படுகிறது, ரஜினிகாந்த் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லை என்றாலும் கூட அப்பா இன்னும் ஒரே ஓரு படம் நடிங்க என அவரை வற்புறுத்தி நடிக்க வைத்து தொடர்ந்து அவரை நடிக்க வைத்து பணத்தை குவித்து வருகின்றனர், ஒரு படத்தின் ரஜினியின் சம்பள தொகையை ஐஸ்வர்யாவுக்கு அடுத்த படத்தின் ரஜினியின் சம்பள தொகை சௌதர்யாவுக்கு என இரண்டு மகள்களும் ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியின் அடுத்த படத்துக்கான அணைத்து வேலைகளையும் இரண்டு மகள்களும் பார்த்து கொள்வார்களாம், இந்நிலையில் 2017ல் அரசியலுக்கு வருவதாக தெரிவித்த ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 31ம் தேதி ஜனவரியில் தொடங்க இருக்கும் புதிய அரசியல் கட்சிக்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில் திடீரெனெ உடல்நல குறைவை காரணம் காட்டி புதிய அரசியல் கட்சி தொடங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திருப்பியதும் அவருடைய இரண்டு மகள்களும் ரஜினியிடம் உங்கள் உடல் நிலை முக்கியம்ப்பா, நீங்க எங்களுக்கு வேண்டும்ப்பா, அரசியல் உங்களுக்கு வேண்டாம் என கதறி அழுததாக கூறப்படுகிறது, இதன் பின்பு தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முடியவில்லை என்கிற அறிக்கையை தயார் செய்து வெளியிட்டதாக கூறப்படுகிறது, ரஜினியை அரசியலில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்த அவருடைய மகள்கள், கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததும் சினிமாவில் நடிப்பதை தொடரலாம் என வலியுறுத்தி உள்ளார்களாம்.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .

என்னை மன்னிசிடுங்க ! விஜயகாந்தை நேரில் சந்தித்து கதறி அழுத வடிவேலு.! பிரேமலதா என்ன சொன்னார் தெரியுமா.?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here