இன்றைய (27-09-2021) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம்
உறவினர்களின் மத்தியில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பரணி : அறிமுகங்கள் கிடைக்கும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்
திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் மறைமுக சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
ரோகிணி : வெற்றிகரமான நாள்.
மிருகசீரிஷம் : சோர்வுகள் நீங்கும்.

மிதுனம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உருவாகும். புதிய வியாபாரம் தொடங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எண்ணங்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

கடகம்
உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் மதிப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வசதிகளை பெருக்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பெருந்தன்மையுடன் செயல்பட்டு பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : அனுபவங்கள் உண்டாகும்.
ஆயில்யம் : நம்பிக்கை மேம்படும்.

சிம்மம்
வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புதிய வியாபாரம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி ஏற்படும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மகம் : பொறுப்புகள் குறையும்.
பூரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திரம் : வாதங்களை தவிர்க்கவும்.

கன்னி
உடன்பிறந்தவர்களின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
அஸ்தம் : லாபகரமான நாள்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்
செய்கின்ற பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்படவும். வியாபாரம் தொடர்பான விஷயங்களை வெளியிடாமல் இருக்கவும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த சில செயல்கள் காலதாமதமாக நிறைவுபெறும். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சுவாதி : நிதானம் வேண்டும்.
விசாகம் : காலதாமதம் ஏற்படும்.

விருச்சிகம்
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபார பணிகளில் நண்பர்களின் உதவியால் மந்தநிலைகள் குறையும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவர் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் காணப்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : மந்தநிலை குறையும்.
கேட்டை : ஒத்துழைப்பான நாள்.

தனுசு
மனதை உறுத்திய நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். நெருக்கடியான சூழ்நிலைகள் மறைந்து சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மூலம் : தீர்வு கிடைக்கும்.
பூராடம் : மாற்றமான நாள்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.

மகரம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப பெரியோர்களிடம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். புதிய நபர்களின் அறிமுகங்களும் அதன் மூலம் மாற்றங்களும் உருவாகும். உத்தியோக பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.
திருவோணம் : ஆதரவுகள் கிடைக்கும்.
அவிட்டம் : சுறுசுறுப்பான நாள்

கும்பம்
குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். விவசாய பணிகளில் ஆலோசனைகளை பெற்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சதயம் : பயணங்கள் உண்டாகும்.
பூரட்டாதி : ஆலோசனை வேண்டும்

மீனம்
முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் இழுபறியாக இருந்துவந்த செயல்பாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.
உத்திரட்டாதி : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
ரேவதி : இழுபறிகள் குறையும்.