இன்றைய (30-07-2021) ராசி பலன்கள்.

0
Follow on Google News

மேஷம்
மனதில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் மூலம் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத தேவையற்ற செலவுகள் ஏற்படும். தாயின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பணியாட்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : குழப்பங்கள் நீங்கும்.
பரணி : செலவுகள் ஏற்படும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்
சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சில அனுபவங்களின் மூலம் புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : தனவரவுகள் கிடைக்கும்.
ரோகிணி : இன்னல்கள் குறையும்.
மிருகசீரிஷம் : புதுவிதமான நாள்.

மிதுனம்
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் வழியில் ஆதரவான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்கள் நீங்கி தெளிவுடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.

கடகம்
உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : எண்ணங்களை அறிவீர்கள்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : ஆதரவான நாள்.

சிம்மம்
உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
பூரம் : விழிப்புணர்வு வேண்டும்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.

கன்னி
மனதில் இனம்புரியாத குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காலதாமதமாக கிடைக்கும். புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தகவல் தொடர்புத்துறைகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : நெருக்கடியான நாள்.
அஸ்தம் : காலதாமதம் உண்டாகும்.
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

துலாம்
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். எதிர்பாராத செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : திருப்தியான நாள்.
சுவாதி : நெருக்கம் அதிகரிக்கும்.
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்
தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
அனுஷம் : நிதானம் வேண்டும்.
கேட்டை : அனுகூலமான நாள்.

தனுசு
தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். மாணவர்கள் பாடங்களை கவனத்துடன் படிக்கவும். கொடுக்கல், வாங்கலில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். பிள்ளைகளால் அலைச்சல்களும், சிறு சிறு விரயங்களும் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மூலம் : தனவரவுகள் கிடைக்கும்.
பூராடம் : முதலீடுகள் மேம்படும்.
உத்திராடம் : விரயங்கள் உண்டாகும்.

மகரம்
தந்தையின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திராடம் : ஆதாயமான நாள்.
திருவோணம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
அவிட்டம் : ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்
மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இழுபறியான பிரச்சனைகளுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர்களின் வகையில் அனுசரித்து செல்வதன் மூலம் மேன்மை உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.?
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : தன்னம்பிக்கையான நாள்.
சதயம் : மேன்மை உண்டாகும்.
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

மீனம்
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும்.வாழ்க்கைத்துணையின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.