இன்றைய (11-12-2021) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம்
வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். புதிய பயணங்களின் மூலம் மகிழ்ச்சியும், அனுபவமும் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். இன்பமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : முயற்சிகள் அதிகரிக்கும்.
பரணி : ஆதாயம் உண்டாகும்.
கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்
நெருக்கமானவர்களின் சந்திப்பு சில மாற்றங்களை ஏற்படுத்தும். மனதில் இருந்த எதிர்மறையான சிந்தனைகள் விலகும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவும், புரிதலும் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.
ரோகிணி : முன்னேற்றமான நாள்.
மிருகசீரிஷம் : புரிதல் ஏற்படும்.

மிதுனம்
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மிருகசீரிஷம் : பயணங்கள் கைகூடும்.
திருவாதிரை : மந்தத்தன்மை குறையும்.
புனர்பூசம் : மேன்மையான நாள்.

கடகம்
உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக செயல்பட வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபார பணிகளில் மந்தத்தன்மையும், அலைச்சலும் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடையே ஆதரவின்மையான தருணங்கள் ஏற்படும். மறைமுகமான விமர்சனங்கள் அவ்வப்போது ஏற்பட்டு மனவருத்தங்களை உண்டாக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
பூசம் : அலைச்சல் ஏற்படும்.
ஆயில்யம் : மனவருத்தங்கள் உண்டாகும்.

சிம்மம்
வியாபார பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் சில அலைச்சலுக்கு பின் கைகூடும். வீடு மற்றும் வாகனங்களை சீர் செய்வதற்கான சூழ்நிலைகள் அமையும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
பூரம் : ஆசைகள் உண்டாகும்.
உத்திரம் : வாகனங்களை சீர் செய்வீர்கள்.

கன்னி
எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். வியாபாரத்தில் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். சோர்வான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : வரவுகள் உண்டாகும்.
அஸ்தம் : வாய்ப்புகளை உருவாக்குவீர்கள்.
சித்திரை : மாற்றமான நாள்.

துலாம்
சவாலான வேலைகளையும், சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற முன்னேற்றங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்களும், அனுபவமும் மேம்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
சுவாதி : முயற்சிகள் கைகூடும்.
விசாகம் : அனுபவம் மேம்படும்.

விருச்சிகம்
பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாக்கு சாதுரியத்தின் மூலம் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். முயற்சிகள் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
அனுஷம் : குழப்பங்கள் குறையும்.
கேட்டை : நம்பிக்கை பிறக்கும்.

தனுசு
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். குழந்தைகளின் கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்துக் கொள்வீர்கள். சாந்தமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

மகரம்
உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார பணிகளில் வேலையாட்கள் சாதகமாக செயல்படுவார்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவதன் மூலம் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பயணங்களின் மூலம் புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சபை தொடர்பான பணிகளில் மதிப்பும், ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். கோபத்தை கட்டுப்படுத்தி முன்னேறுவதற்கான சிந்தனைகள் மேம்படும். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்துக் கொள்வீர்கள். எதிர்பாராத சில ஒப்பந்தங்கள் சாதகமாக முடிவடையும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.
சதயம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

மீனம்
பிற மொழி சார்ந்த மக்களின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவும், புரிதலும் பிறக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.
ரேவதி : விழிப்புணர்வு வேண்டும்.