இன்றைய (09-12-2021) ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம்
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதுவிதமான நம்பிக்கையை ஏற்படுத்தும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : புரிதல் உண்டாகும்.
பரணி : சேமிப்புகள் குறையும்.
கிருத்திகை : நம்பிக்கை உண்டாகும்.

ரிஷபம்
மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கிருத்திகை : தெளிவு பிறக்கும்.
ரோகிணி : அனுகூலம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

மிதுனம்
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பகைமையை தவிர்க்க இயலும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : சேமிப்புகள் குறையும்.
திருவாதிரை : வாதங்களை தவிர்க்கவும்.
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.

கடகம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் சம்பந்தமான புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும், கற்பனைகளும் பிறக்கும். நட்பு அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.
பூசம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
ஆயில்யம் : ஆசைகள் பிறக்கும்.

சிம்மம்
வரவுக்கேற்ப விரயங்கள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய வீடு மற்றும் நிலம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவும், ஆலோசனையும் கிடைக்கப் பெறுவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : தீர்வு கிடைக்கும்.
உத்திரம் : தெளிவு பிறக்கும்.

கன்னி
வியாபார பணிகளில் வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நண்பர்களின் உதவியால் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாகன பழுதுகளை சரி செய்வதற்கான சூழ்நிலைகள் அமையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் கவனம் வேண்டும். அச்சமின்றி செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : தீர்வு கிடைக்கும்.
சித்திரை : கவனம் வேண்டும்.

துலாம்
எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு சாதகமாகும். வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : ஆதரவு கிடைக்கும்.
விசாகம் : அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்
புதிய வேலை சம்பந்தமான முயற்சிகளில் எண்ணங்கள் கைகூடும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றங்கள் உண்டாகும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். புரிதல் உண்டாகும் நாள்
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
விசாகம் : எண்ணங்கள் கைகூடும்.
அனுஷம் : மாற்றங்கள் உண்டாகும்.
கேட்டை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு
சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களில் புதுவிதமான அறிமுகமும், அனுபவமும் ஏற்படும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். மாணவர்கள் விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : அறிமுகம் கிடைக்கும்.
பூராடம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

மகரம்
வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். கல்வி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான எண்ணங்களும், சிந்தனைகளும் பிறக்கும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஆதாயம் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
திருவோணம் : லாபம் மேம்படும்.
அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.

கும்பம்
மனதளவில் இருந்துவந்த சில குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். செய்கின்ற செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். அனுகூலம் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அவிட்டம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
சதயம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
பூரட்டாதி : முதலீடுகள் மேம்படும்.

மீனம்
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலைகளும், மகிழ்ச்சியான தருணங்களும் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோக பணிகளில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
உத்திரட்டாதி : மந்தத்தன்மை நீங்கும்.
ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.